வாழ்ந்தா தாமஸ் ஆல்வா எடிசன் மாதிரி வாழணும்!
பாசிட்டிவிட்டி.. இது இல்லாமல்தான் இன்று நிறையப் பேர் பல பிரச்சினைகளில் சிக்கி உழல்கின்றனர். மனித குலம் கண்ட மகத்தான மனிதர் தாமஸ் ஆல்வா எடிசன் போல வாழ வேண்டும்.
அவரிடம் ஒருமுறை ஒருவர் கேட்டார். நீங்களும் என்னென்னவோ பண்றீங்க.. எதிலுமே வெற்றி கிடைக்கலையே என்றார். அதற்கு எடிசன் சிரித்துக் கொண்டே சொன்னார்.. அட போப்பா நீ வேற.. நான் தோற்றதே கிடையாது.. எதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று நான் பத்தாயிரம் வழிகளில் கண்டுபிடித்து வைத்திருக்கிறேன்.. நீ அப்படி பண்ணிருக்கியா எதையாவது என்று பதிலடியாக கேட்டு அயர்ச்சி அடைய வைத்து விட்டாராம்.

இதுதான் பாசிட்டிவ் மனப்பான்மை என்பது. எது நடந்தாலும் அது நன்மைக்கே என்ற மனப்பக்குவம் வேண்டும். முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுபவனை விட பல முறை தோல்வியடைந்து வெற்றி பெறுபவனே சிறந்த மனிதன். பல அனுபவங்களைக் கடந்து அந்த வெற்றியை அடைந்திருப்பான்.
தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்பார்கள். தோல்வியால் கற்ற பாடங்கள் நமக்குப் பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும்.சிறு வயதில் நாம் நடக்கக் கற்கும்போதே பல முறை தவறி விழுகிறோம். பல முறை முயன்றதால் தான் நாம் எப்படி நடக்க வேண்டும் என்றுக் கற்றுக் கொள்கிறோம். எது சரியான பாதை என்றறிந்துக் கொள்ள தோல்வியைத் தழுவதில் தவறில்லை.
தோல்வியும் வெற்றியும் வீரனுக்கு சகஜம். பல கண்டுபிடிப்புகள் பலவித முயற்சிகள் தோல்விகளுக்குப் பிறகு தான் உருவாக்கப்பட்டுள்ளது. பரீட்சையில் தோல்வியைத் தழுவுபவர்கள் தங்கள் முயற்சியால் தொழில் முனைவோர்களாக மாறுகின்றனர். வாழ்வில் ஒரே தடவையில் வெற்றிக் கண்டவர் எல்லாம் வெற்றியாளரும் இல்லை பலமுறை தோல்வியைக் கண்டு வெற்றியை அடைந்தவனுக்குத் தான் அதன் பலனை முழுமையாக அனுபவிக்கத் தெரியும்.
தோல்வியைக் கண்டு துவளாமல் வெற்றியை நோக்கி வீறுநடை போடுங்கள். நீங்கள் தோல்வி அடையவில்லை வெற்றிக்கான வழியைத் தேடி முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நம்புங்கள். தாமஸ் ஆல்வா எடிசன் பலமுறை தோல்வி அடைந்தாலும் இறுதியில் மின்சாரத்தைக் கண்டபிடித்தார். முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் வெற்றி நிச்சயம். அதனால் தன்னம்பிக்கையோடு எடிசனைப் போல வாழுங்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications