அனைவரிடத்திலும் அன்பு செலுத்துங்கள்!
அனைவரிடத்திலும் அன்பு செலுத்துங்கள். ஒருவரையும் வெறுக்காதீர்கள். வாழ்வது ஒருமுறைதான். அந்த வாழ்க்கையை அழகாக மாற்றுங்கள். அன்பு ஒன்றே வாழ்வை அழகாக மாற்றும். மற்றவர் நம்மீது அன்பு காட்டும் போது நம் மனம் மகிழ்ச்சி கொள்கிறது. அதே அன்பை நாம் மற்றவரிடம் காட்டு்ம் போது நம் மனமும் அமைதி பெறுகிறது.
நம் குழந்தைகளும் நம் பெற்றோரும் நம்மிடம் எதிர்பார்க்கும் மிகப் பெரிய சொத்து அன்பு மட்டுமே. அவர்களுக்காக நீங்கள் சிறிது நேரம் ஒதுக்கி ஆசையாக அவர்களிடம் பேசுங்கள். குழந்தைகளோடு விளையாடுங்கள். முடிந்தவரை உணவு சாப்பிடும் போது ஒன்றுகூடி சாப்பிடுங்கள். அன்பு ஒன்றே அனைத்தையும் மாற்றும். தோல்வியால் துவண்டு போன நெஞ்சம் கூட வீறு கொண்டு எழுந்து வெற்றியை நோக்கிப் பயணிக்கக் காரணமாக இருப்பதும் அன்பு தான்.

தாயின் அன்பிற்கு ஈடு இணையே கிடையாது. அன்பிற்கு அனைத்தையும் மாற்றும் சக்தி உண்டு. அன்பிற்கு அடிமையாகாதவர் எவருமிலர். எல்லோருக்கும் தன் தாய் சமைக்கும் உணவு மிகவும் பிடிக்கும் அது கைப்பக்குவம் மட்டுமல்ல தன் பிள்ளைகளுக்காக அவள் உணவு தயாரிக்கும் போது உணவுப் பொருட்களோடு அன்பையும் சேர்க்கிறாள். அன்பின் பெருமையை உலகிற்கு தன் குறளால் உலகிற்கு உணர்த்தியிருக்கிறார் வள்ளுவர்.
இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்களும் ஏங்குவது அன்பிற்காகத் தான். அன்பு காட்டினால் தீயவனும் நல்லவனாக மாறுவான் தோல்வியடைந்தவனும் சாதனையாளனாக மாறுவான். உயிர்களிடத்தில் அன்பு செலுத்துங்கள். உங்களுக்குப் பிடித்தவர்களுக்கும் உங்களைப் பிடித்தவர்களுக்கும் நேரம் ஒதுக்குங்கள். உங்கள் குடும்பத்தோடு நேரம் செலவிடுங்கள். எப்பொழுதும் புன்னகையோடு வீட்டை வலம் வாருங்கள். அன்பு இருக்குமிடத்தில் எல்லாம் இருக்கும்.
அன்பு காட்டும் இடத்தில் இறைவன் இருப்பான் என்பார்கள். அன்பு காட்டுவதால் பிறருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைப் பார்த்து நீங்களும் மகிழ்வீர்கள். நம் மீது யாராவது அன்பு காட்டினால் அவருக்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அன்புக்கடலில் நீந்துங்கள் மகிழ்ச்சி பொங்கட்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications