ரகிட ரகிட ரகிட.. உங்க மனசுக்கு நீங்கதாங்க ராஜா!!
நீங்கள் ஏழையாக இருக்கலாம்.. உங்களிடம் காசு பணம் எதுவும் இல்லாமல் இருக்கலாம்.. வசதிகள் குறைவாக இருக்கலாம்.. ஆனால் உங்க மனசுதாங்க அரண்மனை.. அதுக்கு நீங்கதாங்க ராஜா.. !
ஒவ்வொரு மனிதனும் ஒரு ராஜாதான். அவனைப் பொறுத்தவரை அவன்தான் அவனுக்கு ராஜா.. அடுத்தவரிடம் கை கட்டி நிற்க வேண்டி வந்தாலும் கூட அவரவர் மனசுக்கு அவரவர் ராஜாதான்.
உங்களுடைய நல்ல மனசுக்கு நீங்க தான் ராஜா. உங்கள் மனதை ஆட்டுவிப்பவர் நீங்கள் தானே. மனதை விசாலமாக்குங்கள். உங்கள் மனக்கோட்டையில் நீங்கள் தான் ராஜா.

மனதை செலுத்துங்கள்
உங்கள் இலக்குகளை நோக்கி உங்கள் மனதைச் செலுத்துங்கள். உங்கள் வெற்றிப் பாதையை நோக்கிப் பயணியுங்கள். உங்களால் முடிந்தவரைப் பிறருக்கு நன்மை செய்யுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைத் தான் உங்கள் மனம் செய்யப் போகிறது. உனக்கென்ன நீ ராஜா மாதிரி இருக்கிறாய் என்பார்கள்.

நற்குணம்
இரக்கமும் நற்குணமும் கொண்ட மனிதனிடம் இறையருள் நிச்சயம் இருக்கும். உங்கள் இலக்குகளை அடைய மனதில் திட்டம் தீட்டி அதன் வழி நடப்பீர்கள். உங்கள் வாழ்க்கைப் பாதையை நீங்கள் தான் தீர்மானிக்கப் போகிறீர்கள். உங்கள் எதிர்காலத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். கனவுகளை நிஜமாக்கப் பாடுபடுங்கள்.

மனசு தான் ராஜா
காசு பணம் இருந்தால் மட்டும் ராஜாவாகி விட முடியாது. எவன் ஒருவன் பிறருக்குத் தன்னால் இயன்ற உதவிகளை எல்லாச் சூழ்நிலையிலும் செய்கிறானோ அவனே சிறந்த ராஜா தான். தன் கொள்கையை அடைய அயராது பாடுபடுபவனும் ராஜா தான். உங்களுடைய ராஜ்ஜியம் உங்கள் மனம் தான். உங்கள் விருப்பம் போல் அதை ஆட்டி வைக்கலாம்.

உங்களுக்கு நீங்கதான் ராஜா
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் ஆனால் உங்கள் மனதிற்கு நீங்க தான் ராஜா. உங்கள் ஆளுமையால் உங்களுடைய செயல்களில் வெற்றி காண்பீர்கள். கம்பீரமாக வெற்றி நடை போடுங்கள். என்றுமே நீங்கள் ராஜா தான். அந்த எண்ணமே உங்களை உயர்வுக்குக் கொண்டு செல்லும்.. உயர்வின் உச்சத்தை எட்டிப் பிடிக்க உதவும்.. முயன்று பாருங்கள் சார்.. முடியாதது என்று எதுவுமே இல்லை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications