Monday Motivation: உனக்காக யாரும் செய்ய மாட்டார்கள்!
உனக்காக யாரும் செய்ய மாட்டார்கள்.. நீதான் எப்போதும் உன் வேலைகளைச் செய்ய வேண்டும். இந்த வாக்கியத்தை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் நண்பர்களே.
நமது வேலைகளை நாம்தானே செய்ய வேண்டும். நமக்காக யாராவது வந்து செய்வார்கள் என்று காத்திருந்தால் கடைசி வரை அதை அப்படியேதான் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

தன் கையே தனக்குதவி என்பார்கள். நம்முடையப் பணிகளை நாம் தான் முடிக்க வேண்டும் மற்றவர்கள் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கக் கூடாது. அலுவலகத்தில் வேலைப் பார்க்கும் போது அங்கிருக்கும் குழாயை நாம் பயன்படுத்தினால் நாம் தான் அதைச் சரியாக மூட வேண்டும்.
இன்னும் சிலர் தங்கள் வீட்டிலேயே தேவையில்லாமல் மின்விசிறி மற்றும் மின்விளக்குகளைப் போட்டுவிட்டுச் சென்றுவிடுவர். அதனால் நம் வீட்டு மின்சாரக் கட்டணம் தானே அதிகரிக்கும். அதனால் நாம் தான் நம் பொறுப்புகளைச் செவ்வனே செய்து முடிக்க வேண்டும்.
காலையில் எழுந்து நம் உடலை எப்படித் தூய்மையாக வைத்துக் கொள்கிறோமோ அதுபோலத்தான் நம் மனதையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நம் அலுவலகத்திலும் நமக்குக் கொடுத்த வேலைகளை மற்றவரிடம் கொடுக்காமல் உங்கள் வேலைகளை நீங்களே திறம்படச் செய்யுங்கள். உங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளையும் சிறுவயது முதலே அவர்களது வேலைகளை அவர்களே செய்யப் பழக்குங்கள். சிலர் குளித்துவிட்டு துண்டை நாற்காலியில் போட்டுச் சென்றுவிடுவர். அவ்வாறு போடாமல் அதை துவைக்கும் இடத்தில் போடுவது நலம்.
எத்தனை நாட்களானாலும் உங்கள் வேலைகளை நீங்கள் தான் செய்ய வேண்டும் யாராவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் அது கிணற்றில் போட்ட கல் போல அந்த வேலை அப்படியே தான் இருக்கும். உங்கள் பணிகளை நீங்களே செய்யுங்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் வாழ்விலும் வெற்றி வாகை சூடுங்கள். நாளை நமதே இந்த நாளும் நமதே.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications