வெல்வது முக்கியமில்லை.. வீரர்களே எப்போதும் வெல்வதுமில்லை.. போரிடுவதே முக்கியம்!
ஒரு அழகான வாசகம் உண்டு.. "வீரர்களே எப்போதும் போர்களில் வெல்வதில்லை.. மாறாக எவன் ஒருவன் தொடர்ந்து போரிடுகிறானோ அவனே வெல்வான்" என்பதே அந்த வாசகம்.
எத்தனை பெரிய உண்மை பாருங்கள்.. எல்லாம் செஞ்சு பார்த்தேன் முடியலை.. விட்டுட்டேன்.. என்று சொல்வோர்தான் அதிகம்.. என்ன ஆனாலும் சரி அதை சாதிக்காமல் விட மாட்டேன் என்று சொல்லிச் சொல்லி தொடர்ந்து முயன்று வெற்றி பெறுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

உண்மையில் இந்த இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான் உண்மையான போர் வீரர்கள் வெற்றியாளர்கள். கதவைத் தட்டிப் பார்த்தேன் திறக்கலை.. அதனால தட்டுவதை விட்டு விட்டேன் என்று சொல்வது இயலாமை.. அதுவே அந்தக் கதவை திறக்க தொடர்ந்து தட்டுவதும் அல்லது மாற்று வழியைக் கண்டுபிடிப்பதும்தான் புத்திசாலித்தனம்.
முயற்சி திருவினையாக்கும் என்பது போல் தொடர்ந்து முயற்சி செய்யும் மனிதனே வாழ்வில் வெற்றியடைகிறான். எனக்கு இந்த செயல் வராது என்று நினைக்காமல் ஏன் எனக்கு அந்த செயல் ஏன் எனக்கு வரவில்லை நிச்சயம் அச்செயலில் வெற்றி அடைந்தே தீருபவன் தான் சிறந்த வீரன்.
முதல் முயற்சியிலியே நம்மால் சைக்கிள் ஓட்ட முடியுமா. முடியாது. பல முறை முயற்சி செய்து கீழே விழுந்து எழுந்து அடிபட்ட பிறகு சைக்கிள் ஓட்டும் போது கிடைக்கும் சந்தோசமே தனி தான். ஒரு முறை சைக்கிளில் இருந்து கீழே விழுந்துவிட்டோமே என்று ஒதுங்கி நின்றால் காலத்திற்கும் நடைராஜா தான். அதுவே மீ்ண்டும் மீண்டும் முயற்சி செய்தால் நிச்சயம் நம்மால் சாதிக்க முடியும்.
முதல் முயற்சியிலேயே எவருக்கும் வெற்றிக் கிடைக்காது. எதிர்நீச்சல் போட்டால் தான் சில சமயங்களில் வெற்றி கிடைக்கிறது. சிறு குழந்தைகள் முதலில் படிக்கச் சொன்னால் சரியாகப் படிக்கத் தெரியாது. எனக்குப் படிக்க வரவில்லை நான் படிக்கமாட்டேன் என்று அக்குழந்தை அடம்பிடித்தால் அது எப்பொழுதும் படிக்க முடியாது. அதுவே அக்குழந்தையை நாம் முயற்சி எடுத்து மீண்டும் மீண்டும் படிக்க வைத்தால் மட்டுமே அக்குழந்தையால் படிக்க முடியும்.
சிலந்தி போல எதிர்நீச்சல் போட்டால் தான வாழ்வில் வெற்றியடைய முடியும். எனக்கு இது வராது என்னால் முடியாது என்று நினைப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயற்சி வேண்டும் வெற்றிக்கனியை எட்டும் வரை. அலைகள் ஓய்வதில்லை அது போல் நாமும் வெற்றியடைய தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். உங்களால் முடியும் உங்களால் மட்டுமே முடியும் என்ற நினைப்போடு ஒரு முறையல்ல பலமுறை போராடுங்கள் வெற்றி உங்கள் வசமாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications