நமக்கு நாமே... யாரும் தேவையில்லை!
நமக்காக யாருமே இல்லையே என்று சிலர் வருந்துவார்கள்.. அதை அப்படியே திருப்பிப் போட்டுப் பாருங்களேன்.. நமக்கு யாருமே தேவையில்லை.. நமக்கு நாமே என்று மாறிப் பாருங்களேன்.. உங்களை நோக்கி எல்லோரும் ஓடி வருவார்கள்.. அதுதாங்க கெத்து!
உங்களுடைய திறமைகளை வெளிக்கொணர்ந்து உங்கள் இலக்குகளை அடையுங்கள். அதுவரை நம்மைப் பற்றி யாரும் நினைக்கவில்லை என்று நினைக்காதீர்கள்.அந்த நினைப்பை எல்லாம் தூக்கியெறிந்து விட்டு வெற்றியை நோக்கிச் செல்லுங்கள். நீங்கள் வெற்றி பெற்ற பிறகு உங்களைத் தேடி உங்கள் சொந்தங்கள் வரும் அதுவரை பொறுமையாகக் காத்திருங்கள்.

வாழ்க்கையில் நம் அனைவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். லட்சியத்தை அடையும் போது நீங்களும் சரித்திரத்தில் இடம்பிடிக்க ஒரு வாய்ப்பு கிட்டும். தூற்றுவார் தூற்றட்டும் என்று நினைத்து அதைப் பற்றிக் கவலைப்படாமல் தன் குறிக்கோளை நோக்கி அடியெடுத்து வைப்பவனே வாழ்க்கையில் வெற்றியாளனாகிறான்.
உங்களுக்கு யாரும் இல்லையே என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். அவர்கள் எல்லாம் உங்களைப் பற்றி சரிவர அறியாதவர்கள். காலம் கனியும் போது அவர்களும் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். இதையே நினைத்து வருந்திக் கொண்டு உங்கள் இலக்கை அடைவதில் கோட்டை விடாதீர்கள்.
எண்ணித் துணிக கருமம் என்பது போல் உங்களுடைய லட்சியத்தை அடைவதற்கான முயற்சியில் தீவிரமாகச் செயல்படுங்கள். வெற்றி கிட்டிய பிறகு நீங்கள் வேண்டாம் என்று கூறிய அனைவரும் உங்களைத் தேடி அவசியம் வருவார்கள்.
நமக்காக யாரும் இல்லையே என்று வருந்தாமல் உங்களுக்குப் பிடித்தவர்களை உங்களை நெருங்க வைப்பதற்கு ஒரே வழி உங்களுடைய வெற்றி மட்டுமே என்பதை நினைவில் வைத்துப் பணியாற்றுங்கள். நமக்கு நாமே என்ற எண்ணத்துடன் இருங்கள் பிறகு பாருங்கள் உங்களைச் சுற்றி ஒரு கூட்டமே இருக்கும்.












Click it and Unblock the Notifications