"வள்ளி" பட ரஜினி மாதிரி இருக்காரே.. மனுஷனுக்கு என்னா ஒரு தன்மானம்.. ஒத்த வார்த்தை சொன்னாலும்.. நச்!
ஓசி டீ தேவையில்லை என்ற சொன்ன பெரியவருக்கு பாராட்டு குவிகிறது
கோவை: "வள்ளி" பட ரஜினி மாதிரி இருக்காரே.. இந்த பிச்சைக்காரர்தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்.. மனுஷன் படு ஸ்ட்டிரிக்ட்.. ஒத்த வார்த்தை பேசினாலும் நச்சுன்னு மண்டையில அடிக்கிறது போல பேசி இருக்கிறார் ஒரு டீக்கடையில்!
கோவை கவுண்டம்பாளையம் பேரூராட்சி் திருமலைநாயக்கன்பாளையத்தில் இருக்கும் டீக்கடைக்கு ஒரு பிச்சைக்காரர் வந்தார்.. கிழிந்த சட்டை, பேண்ட் போட்டிருந்தார்.. அது பிளாக் & பிளாக்கில் இருந்தது..
முகமெல்லாம் தாடி வளர்ந்து தொங்கியது.. கையில் ஒரு தடி, ஒரு துணி மூட்டையை சுருட்டி கக்கத்தில் வைத்து கொண்டிருந்தார்.

தோற்றம்
டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தவர்கள் ஒரு மாதிரியாக இவரை பார்த்தார்கள்.. பெஞ்சில் இருந்து இன்னும் கொஞ்சம் தூரமாக தள்ளி உட்கார்ந்து கொண்டனர்.. பொதுவாக இப்படி தோற்றத்தில் யாரையாவது நாம் பார்த்தால், மனிதாபிமானத்துக்காக பணம் தருவோம், அல்லது இலவசமாக டீ வாங்கி தருவோம்.. அதேபோல சில டீக்கடைக்காரர்களும் ஃப்ரீயாகவே இதுபோன்றவர்களுக்கு டீ தந்து உதவுவார்கள்.

10 ரூபாய்
இந்த கடைக்காரரும் அவருக்கு டீ தந்தார்.. கிளாஸை அவரிடம் தந்து, "கொஞ்சம் தூரமாக உட்கார்ந்து குடி" என்றார்.. டீ கிளாஸை தந்ததும் பெரியவர் டக்கென 10 ரூபாயை எடுத்து கடைக்காரரிடம் நீட்டினார்.. அதை பார்த்ததும் கடைக்காரருக்கு எதுவும் புரியவில்லை.. ஓசி டீ என்றுதான் நினைத்திருந்தார்.. இருந்தாலும் 10 ரூபாயை பார்த்ததும், "வேண்டாம்.. சும்மா குடிச்சுட்டு போ" என்றார் கடைக்காரர்

சுடச்சுட பதில்
உடனே பிளாக் & பிளாக் பெரியவர் "இந்தா புடி.. இந்த பணத்தை வாங்கினால் தான் டீயை வாங்குவேன்" என்றார்.. அதற்கு டீக்கடைக்காரர் "பரவாயில்லை குடியுங்கள்" என்று சொன்னாலும் அந்நபர் கேட்பதாக இல்லை.. இறுதியில் "ஓசி டீ எல்லாம் நான் குடிக்கிறது இல்லை" என்று கிளாஸில் இருந்த டீயைவிட சுடச்சுட பதில் தந்தார்... இதற்கு பிறகு கடைக்காரரிடம் பேச்சே காணோம்.. 10 ரூபாய் பணத்தை வாங்கி கொண்டார்.

நெத்தியடி
அந்த பெரியவர் டீயை குடித்து, கிளாஸை வைத்து விட்டு நகர்ந்தார்.. இதனை டீக்கடையில் இருந்த ஒருவர் செல்போனில் வீடி யோ எடுக்க.. அதுதான் இப்போது வைரலாகி வருகிறது. இந்த பிச்சைக்காரருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன! யாரையுமே எப்பவுமே தோற்றத்தை மட்டுமே பார்த்து மதிப்பிடக்கூடாது என்பதற்கு சரியான நெத்தியடிதான் இந்த டீக்கடை சம்பவம்!
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications