யார் நம்பிக்கைக்குரியவர்...?
யாரை நம்பலாம் தெரியுமா.. தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்தான் பிறரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக முடியும். அப்படிப்பட்டவரைத்தான் நாம் நம்பலாம்.. அவர்கள்தான் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க முடியும்.
நம்பிக்கைதானே எல்லாம். முதலில் நாம் நம்மை நம்ப வேண்டும். தன்னம்பிக்கை இல்லாத மனிதன் தும்பிக்கை இல்லாத யானை போல.. பலம் இருந்தாலும் தும்பிக்கை இல்லாவிட்டால் என்ன செய்ய முடியும் யானையால். அது போலத்தான் நமக்கும் தன்னம்பிக்கை முதலில் இருக்க வேண்டும். பிறகுதான் எதையும் நம்மால் செய்ய முடியும்.

தன்னம்பிக்கை உள்ள நபர்கள்தான் மற்றவர்களின் திறமைக்கும், அறிவுக்கும் மதிப்பு கொடுப்பார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் நாம் தாராளமாக நம்பலாம்.
நம்மை நாமே நம்பவில்லையெனாறால் எந்த ஒரு வெற்றியையும் வாழ்வில் அடைய முடியாது. நீங்கள் சாதனையாளராக வெற்றியாளராக வேண்டும் என்றால் தன்னம்பி்க்கை அவசியம். என்னால் நிச்சயம் வெற்றிப் பெற முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். எத்தனை முறை தோல்வியைச் சந்தித்தாலும் நிச்சயம் நான் ஒரு நாள் அதில் வெற்றியடைவேன் என்ற நம்பிக்கை வேண்டும்.
வாழ்க்கையே போர்க்களம் என்பார்கள். இந்தக் களத்தில் தன்னம்பிக்கையோடு இருக்கும் மனிதன் கடினமான சூழலையும் எதிர்க்கொண்டு வாழ்வில் வெற்றியடைகிறான். குழந்தைகளுக்கும் சிறுவயதிலேயே உன்னால் முடியும் நீ முயற்சி செய் வெற்றியடைவாய் என்று பிள்ளைகளின் நம்பிக்கையைப் பெற்றோர்கள் வளர்க்க வேண்டும். எந்த ஒரு தொழிலிலும் வெற்றியடைய வேண்டுமெனில் தன்னம்பிக்கை அவசியம்.

இன்று அனைவரும் கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸோடு போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தப் போராட்டத்திலும் தன்னம்பிக்கை மிகவும் அவசியம். நான் மீண்டு வருவேன் என்ற தன்னம்பிக்கை தான் கொரோனா நோயாளிகளுக்கு வேண்டும். அதுவே அவர்களைப் பாதி குணமாக்கி விடும்.
வீட்டிலிருப்பவர்களும் தன்னம்பிக்கையோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்த நோயிலிருந்து தப்பலாம். உங்கள் மீதுள்ள நம்பிக்கையை மட்டும் எந்த ஒரு சூழலிலும் விட்டுவிடாதீர்கள். வாழ்க்கையில் எது முக்கியமோ இல்லையோ தன்னம்பிக்கை முக்கியம் அமைச்சரே.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications