அறிவது பெரிதல்ல.. அதை பயன்படுத்த வேண்டும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிறையப் பேருக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும்.. நல்லதுதான். ஆனால் சேர்த்து வைத்த அறிவை என்ன செய்வது என்று தெரியாமல் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிடுவார்கள்.

அங்குதான அவர்கள் தோற்கிறார்கள். சேர்த்து வைத்த அறிவை அப்படியே விட்டு விடக் கூடாது.. மாறாக அதை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நாலு பேருக்கு நல்லது கிடைக்கும். நாலு பேருக்கு நல்லது செய்யாத எதுவுமே யாருக்குமே பலன் தராது.

use the knowledge you inherit

அதேபோலத்தான் நிறைய விருப்பப்படுவோம்.. ஆனால் அதை செய்ய முயல்வதே இல்லை. முயற்சி கூட எடுக்க மாட்டோம். அதுவும் தவறு.. முயற்சிக்காமல் எதுவுமே கிடைக்காது.

நமக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். உங்களிடம் என்ன திறமை உள்ளதோ.. அதை சரியாக பயன்படுத்துங்கள். அதை வைத்து மேலும் உயரச் செல்ல முயலுங்கள். உங்களுக்குக கதை எழுதும் திறமை உள்ளதா. அப்போது கதை எழுதி உங்கள் திறமைகளை நிரூபியுங்கள்.

ஒரு ஊரில் மகாதேவன் சகாதேவன் என இருவர் இருந்தனர். இருவரும் ஓவியக்கலையில் சிறந்து விளங்கினர். சகாதேவன் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினான். மகாதேவன் தனக்குத் தெரிந்த ஓவியக்கலையை சிறு குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தான். சகாதேவனுக்கும் ஓவியக்கலை தெரிந்திருந்தாலும் தன் மகனுக்குக் கூட அவர் சொல்லிக் கொடுத்ததில்லை.

மகாதேவனின் ஓவியத்தில் தன்னை மறந்த அந்த ஊரின் தலைவர் ஊர்க்கோயிலில் சித்திரங்கள் வரையும் பொறுப்பை அவரிடம் கொடு்த்தார். அது மட்டுமின்றி அவரது பிள்ளைகளையும் மகாதேவனிடம் ஓவியம் கற்க அனுப்பினார். இவரிடம் ஓவியம் கற்ற பலரும் இக்கலையில் புகழ்பெற்று விளங்கினர். இவர் தன் மாணாக்கர்களிடம் ஓவியக்கலையை நீங்கள் என்னிடம் கற்க வேண்டும் என்றால் நீங்கள் அதில் தேர்ந்தபின் அக்கலையை குறைந்தது நாலு பேருக்காவது கற்றுத்தர வேண்டும் என்ற நிபந்தனையோடு தான் கற்றுத் தர ஒப்புக் கொள்வார்.

இ்ன்று அவருடைய மாணவர்கள் தேசிய அளவில் ஓவியப்போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளை வென்று வருகின்றனர். அது போல எக்கலையாக இருப்பினும் அதை அனைவருக்கும் கற்றுக் கொடுங்கள். அள்ள அள்ளக் குறையாதது அறிவு எனவே அதை பயன்படுத்துங்கள் நம் அன்றாட வாழ்வில். அழியாச் செல்வமாகிய அறிவைப் பயன்படுத்திப் பாருங்கள் வெற்றி நிச்சயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+