சமூக ஊடகங்கள், இ காமர்ஸ் தளங்கள் MSMEகளுக்கு எந்த வகையில் உதவுகின்றன? விடா முயற்சியால் சாதித்த கிரண்!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் பெரும்பாலும், தங்கள் பொருட்களை சந்தைப்படும் மிக முக்கியமான ஒரு இடமாக பலருக்கும் மாறியுள்ளது. இதனை பயன்படுத்தி பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்கள் பலர். ஆரம்ப காலத்தில் பொழுதுபோக்காக பயன்படுத்தப்பட்ட சமூக வலைதளங்கள், இன்று வணிக நோக்கத்திற்கான சிறந்த சந்தைகளாக மாறியுள்ளன.
பலரும் யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என பலவற்றின் மூலம் தங்களுடைய பொருளை, சேவையை பட்டிதொட்டியெல்லாம் சிறப்பாக சந்தைப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கிராமப்புறத்தில் வசிக்கும் பெண்கள், இளைஞர்கள் மிகப்பெரிய அளவில் இதை பயன்படுத்தி தங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்து வருகின்றனர்.

இ-காமர்ஸ் வணிகம்!
சமூக வலைதளங்கள் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் என பலவும், தனிநபர்கள் மற்றும் எம்.எஸ்.எம்.இ (MSMEs)-க்களுக்கு பல வழிகளை காட்டியுள்ளன. முதன்மையாக அமேசான், பிளிப்கார்ட் மற்றும் மீஷோ அல்லது சொந்த இணையதளங்கள் மூலம் பொருட்களை நேரடியாக விற்பனை செய்கின்றனர்.
இதில் பலரும் சொந்தமாக உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றனர். சிலர் தங்கள் பகுதிகளில் கிடைக்கும் பிரபலமான பொருட்களை மொத்தமாக வாங்கி சந்தை படுத்துகின்றனர். உதாரணத்திற்கு கிராமப்புறங்களில் மலிவாக கிடைக்கும் அரப்பு தூள், ஆவாரம் பூ தொடங்கி, நெசவு பொருட்கள், உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், மண்புழு உரங்கள் என பலவற்றையும் சந்தை படுத்துகின்றனர்.
உற்பத்தி இடங்களில் இருந்து வாங்கி விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், தங்கள் கடைகளில் பொருட்களை வாங்கி ஹோல்டு செய்து வைத்திருப்பதில்லை. வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆர்டர் வந்ததும், அந்த ஆர்டரை நேரடியாக மூன்றாம் தரப்பு சப்ளையர்களுக்கு அனுப்பி, அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு பொருளை அனுப்பி வைப்பார்கள்.
இதன் மூலம் தனியாக அலுவலகம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதிக முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இது சிறிய அளவிலான நிதியை மட்டும் வைத்துக் கொண்டு, வர்த்தகம் செய்ய நினைப்பவர்கள், குறிப்பாக பெண்களுக்கு உதவிகரமாக இருக்கிறது. பல்வேறு வணிகத் தடைகளை குறைத்து, வலுவான வணிக சூழலை ஏற்படுத்தி கொடுக்கின்றன.
சமூக வலைதளம் மூலம் சம்பாதித்தல்!
இன்னும் சிலர் தங்களிடம் உள்ள தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி, வீடியோக்களாக பதிவிட்டு அதன் மூலம் பயனர்களை அதிகரித்து, பணம் சம்பாதிக்கின்றனர். இதில் கூகுள் ஆட்சென்ஸ், தனிப்பட்ட முறையில் விளம்பரங்கள் வாங்கி போடுதல், புரமோஷன் வீடியோக்கள், யூடியூப் மெம்பர்ஷிப் என பலவாறாக சம்பாதிக்கின்றனர்.
இதன் மூலம் வெளியில் வேலைக்கு செல்ல முடியாமல் இருக்கும் பெண்கள், சிறிய அளவில் முதலீடு செய்து, தங்கள் வீட்டின் சமையலறையில் இருந்தே தங்களது வணிகத்தை தொடங்குகின்றனர். அப்படி ஆரம்ப காலத்தில் பொழுதுபோக்காக தொடங்கிய சேனல்கள் பலவும், இன்று பலவும் மிகப்பெரிய வணிக நிறுவனங்களாக உருவெடுத்துள்ளன.
குறிப்பாக பல பெண்கள் தங்களுக்கு தெரிந்தவற்றை வைத்து, சிறந்த தொழில்முனைவோராக முன்னேற்றம் கண்டுள்ளனர். உதாரணத்திற்கு யூடியூப்-ல் ஓர் சமையல் கலைஞர், சமையல் வீடியோக்களை இலவசமாகப் பகிர்ந்து, பார்வையாளர்களை பெரிய அளவில் கவர்ந்து, அதன் பின்னர், தனது சொந்த இ-காமர்ஸ் இணையதளத்தின் மூலம் பிரீமியம் மசாலாக்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார்.
இதில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல வீடியோக்கள் மூலம் வருமானம் உண்டு. பொருட்கள் விற்பனை மூலமாகவும் வருமானம் உண்டு. இப்படி பலருக்கும் சமூக வலைதளங்களே ஆரம்ப கட்டத்தில் சிறந்த வியாபார தளமாக இருக்கின்றன.
இன்றைய காலகட்டத்தில் மேற்கண்ட பல்வேறு சமூக வலைதளங்கள் போன்ற பல அம்சங்கள் இருந்தாலும், முந்தைய காலகட்டத்தில் அப்படியான அம்சங்கள் பெரிதாக இல்லை. இருந்தாலும் சிறு நிறுவனமாக தொடங்கி, இன்று மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவராக மாறியிருக்கும் பெண்களில் ஒருவர் கிரண் மஜும்தார்.
யார் இந்த கிரண் மஜும்தார்?
கிரண் மஜும்தார் ஷா, இவர் தான் பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். 1978ல் பெங்களூரில் உள்ள வாடகை வீட்டின் கராஜில் இருந்து ஒரு சிறிய கூட்டு தொழிலைத் தொடங்கினார். இது எம்.எஸ்.எம்.இ -க்குரிய சிறிய முதலீட்டு எல்லையில் ஆரம்பித்து, இன்று உலகளாவிய பயோடெக் நிறுவனமாக வளர்ந்துள்ளது. கிரணின் ஆரம்ப கால முதலீடு வெறும் 10,000 ரூபாய் மட்டுமே.
இந்த நிறுவனம் தொடங்கிய ஆரம்பத்தில், காகிதம், ஜவுளி மற்றும் மதுபானத் தொழிலுக்கான தொழில்துறை என்சைம்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தியது. அதன் பிறகு பப்பாளி பழத்தில் இருந்து பெறப்பட்ட பப்பைன் என்ற தாவர என்சைம், பயோகானின் முதல் ஏற்றுமதிப் பொருளாக இருந்தது. இதுவே பயோகானின் முக்கிய மைல்கல் எனலாம். இதில் சாதனை வளர்ச்சி என்னவெனில் பயோகான் தொடங்கப்பட்ட ஒரு வருடத்திற்குள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு என்சைம்களை ஏற்றுமதி செய்த முதல் இந்திய நிறுவனமாகவும் வளர்ச்சி கண்டது.

அதன் பிறகு 2001ம் ஆண்டில் கொலஸ்ட்ராலை குறைக்கும் மூலக்கூறை உற்பத்தி செய்ய, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஒப்புதலையும் பெற்ற முதல் இந்திய நிறுவனமாக இருந்தது. அதன் பிறகு பல்வேறு பிரிவுகளில் கவனம் செலுத்த தொடங்கிய நிறுவனம், மிகப்பெரிய இன்சுலின் உற்பத்தியாளர்களில் ஒன்றாகவும் மாறியது.
2004ல் பங்குச் சந்தையில் நுழைந்த நிறுவனம், தொடர்ந்து சிறந்த மருந்து உற்பத்தியாளர்களில் ஒன்றாகவும் மாறியது. இன்று சிறந்த பணக்காரப் பெண்களில் ஒருவராகவும் மாறியிருக்கும் கிரண், ஆரம்ப காலகட்டத்தில் வேலை தேடிச் சென்ற இடங்களில் நிராகரிக்கப்பட்டவர் ஆவார். ஆனால் அதற்கெல்லாம் சோர்ந்து போகாமல், தனது முயற்சியை மூலதனமாக கொண்டு இன்று சர்வதேச பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications