MSME ஏற்றுமதியாளர்களுக்கு 2 - 3.5% வட்டி மானியம் கிடைக்கலாம்! இது மட்டும் நடந்தா பிரச்சனையேயில்லை!
அமெரிக்காவின் கூடுதல் வரியால் தத்தளித்து வரும் இந்திய எம்.எஸ்.எம்.இ ஏற்றுமதியாளர்கள், அவற்றை சமாளிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் அரசு தரப்பில் இருந்து மானிய சலுகை வழங்கினால் தான் அதை சமாளிக்க முடியும் என ஏற்றுமதியாளர்கள் கருதுகின்றனர்.
இது குறித்து ஆங்கில செய்தித் தளம் ஒன்றில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் கீழ், MSME ஏற்றுமதியாளர்களுக்கு இலக்கு வைக்கப்பட்ட முறையில் அரசு ஆதரவு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதன் மூலம் எம்.எஸ்.எம்.இ ஏற்றுமதியாளர்கள் 2% - 3.5% வரையில் வட்டி மானியம் பெறலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த மானிய சலுகையானது ஒவ்வொரு துறையின் தேவைகள் மதிப்பிடப்பட்ட பிறகு, அந்தந்தத் துறைகளுக்கு ஏற்ப இந்த மானியத்தின் அளவு மாறுபடலாம்.
சவால்களை சமாளிக்க முடியாது?
அமெரிக்க அரசால் விதிக்கப்பட்ட 50% கூடுதல் வரியால், அதிக எண்ணிக்கையிலான எம்.எஸ்.எம்.இ-க்கள், அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகள் நிறைந்த துறையானது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு செய்யும் ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்திய அரசின் தரப்பில் ஏதேனும் சலுகைகள் கிடைக்குமா என்று எதிர்பார்க்கின்றன.
இது குறித்து சமீபத்தில் பிரதமரை சந்தித்த ஏற்றுமதியாளர்கள், தாங்கள் சந்திக்கும் சவால்களை பற்றியும் எடுத்துரைத்துள்ளனர். தங்களால் கூடுதல் வரியின் விளைவை நிர்வகிக்க முடியவில்லை என்பதையும் கூறியுள்ளனர். ஆக அரசிடம் இருந்து உதவி அல்லது ஆதரவு வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இந்திய அரசானது விரைவில் வட்டி மானியத் திட்டத்தை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன மாற்றம் இருக்கலாம்?
முந்தைய வட்டி மானியத் திட்டத்தை (interest Subvention Scheme) போல், அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் சலுகை வழங்குவதற்கு பதிலாக, இந்த முறை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்க கவனம் செலுத்தப்படவும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு சவால்களை சமாளிக்க முடியும். அதற்கான ஒரு ஆதரவு தொகுப்பாகவும் இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திட்டமானது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தெந்த துறைகள் பாதிப்பு?
இந்திய ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் எம்.எஸ்.எம்.இ-க்கள் ஆதிக்கம் செலுத்தும் சில முக்கிய துறைகள், அமெரிக்காவின் வரி அதிகரிப்பால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன.
· ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் துறை
· இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி
· கைவினைப் பொருட்கள்
· தோல் மற்றும் தோல் சார்ந்த பொருட்கள்
· தளபாடங்கள் மற்றும் பொம்மைகள்
அமெரிக்க அரசின் வரி சவாலில் இருந்து தப்பிக்க ஏற்றுமதியாளர்கள் அரசின் உதவியை நாடியுள்ள நிலையில், அவர்களுக்கான வட்டி மானிய சலுகையோடு, புதிய சந்தைகளை கண்டறிவதிலும் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதுவும் கூடுதல் வரியில் இருந்து தப்பிக்க உதவுவதோடு, அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்காமல், ஏற்றுமதியை பல்வகைப்படுத்தவும் முடியும்.
முந்தைய திட்டத்தின் நிலைப்பாடு?
முன்னதாக நடைமுறையில் இருந்த வட்டி மானியத் திட்டமானது, வட்டி சமன்பாட்டுத் திட்டம் (Interest Equalisation Scheme) என்று கூறப்பட்டது. இது எம்.எஸ்.எம்.இ-க்கள் உட்பட அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் 3% மானியத்தை உறுதிப்படுத்தியது. இது முதலில் ஏப்ரல் 2015ல் ஐந்து ஆண்டு திட்டமாகப் தொடங்கப்பட்டது. பல முறை நீட்டிக்கப்பட்ட இந்த திட்டம், ஒவ்வொரு IEC குறியீடு உள்ள ஒரு ஏற்றுமதியாளருக்கும் 50 லட்சம் வரையிலான உச்ச வரம்புடன் 2024 டிசம்பரில் முடிவுக்கு வந்தது.
அரசின் மேற்கண்ட வட்டி மானியத் திட்டமானது வட்டி விகிதத்தை 9% - 12%ல் இருந்து 5 - 7% ஆக குறைக்க உதவியது. இது ஏற்றுமதி நிறுவனங்களின் கடன் செலவுகளை குறைக்க உதவியது. இதன் மூலம் ஏற்றுமதியை அதிகரிக்கவும் முடிந்தது. போட்டித் திறனையும் அதிகரிக்கும். இந்த சூழலில் 2026ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் திட்டத்தில் ஏற்றுமதி மேம்பாட்டு பணியின் ஒரு பகுதியாக, இத்திட்டத்தை நீட்டிப்பது குறித்து அமைச்சகங்களுக்கு இடையிலான ஆலோசனைகள் சமீபத்தில் நடத்தப்பட்டது.
என்னவாகும்?
மறுசீரமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டம் அமலுக்கு வந்தால், நிச்சயம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியானது அதிகரிக்கும். அதாவது எம்.எஸ்.எம்.இ-க்களுக்கான வட்டி விகிதத்தை 2 - 3% குறைப்பதன் மூலம், ஏற்றுமதி ஆர்டர்களை செயல்படுத்த வாங்கும் கடன் செலவு குறையும். இது வருமானத்தை அதிகரிக்க உதவும்.
மேலும் சேமிப்பையும் அதிகரிக்க உதவும். இது புதிய முதலீடுகளுக்கும் உதவிகரமாக இருக்கும். மொத்தத்தில் வட்டி மானியத் திட்டம், ஏற்றுமதியாளர்களுக்கு பொருளாதார ரீதியாகவும், போட்டித்தன்மை ரீதியாகவும் நேரடியாக ஊக்கத்தை அளிக்கும். அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஒரு முக்கிய உந்து சக்தியாக செயல்படும்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications