Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையில் MSME-க்கள் தான் அடித்தளம்! ஏன் தெரிஞ்சுக்கணுமா?

Subscribe to Oneindia Tamil

ஜவுளித்துறை மற்றும் ஆயத்த ஆடை துறையில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) பங்கானது மிகவும் முக்கியமானது. தவிர்க்க முடியாதது கூட. இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக, அதிக வேலை வாய்ப்பை கொடுப்பது ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறை தான். இந்த வேலை வாய்ப்புகளில் பெரும்பகுதியை எம்.எஸ்.எம்.இ -க்கள் தான் கொடுக்கின்றன.

அதிலும் குறிப்பாக இந்த வேலைவாய்ப்பில் பெண்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. கிராமப்புறம் மற்றும் அரை நகர்ப்புறப் பகுதிகளில் வாழும் மக்கள், கைத்தறி, விசைத்தறி மற்றும் சிறிய ஆடை உற்பத்தி அலகுகள் என பலவாறு வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

MSME

பல்வேறு செயல்பாடுகள்& வேலை வாய்ப்புகள்!

ஜவுளித் துறையை பொறுத்த வரையில் பலவகைப்பட்ட செயல்பாடுகள் உள்ளன. இதனால் இத்துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகம் எனலாம். நூற்பு எனப்படும் ஸ்பின்னிங், நெசவு தொடங்கி, அதைப் பதப்படுத்துதல், ஆடைகளாக தைத்தல் போன்ற இறுதி அம்சத்தை எட்டும் வரையில் பல வகையான பிரிவுகள் உள்ளன. ஸ்பின்னிங்கில் உருவாகும் நூல்களை பதப்படுத்தி, சாயமேற்றி, அதை துணியாக விசைத்தறி, கைத்தறி மூலம் நெசவு செய்யப்படுகிறது.

இந்த துணிகள் அடுத்தகட்டமாக கார்மெண்ட்ஸ்களை நோக்கி படையெடுக்க படுகின்றன. மேற்கண்ட செயல்பாடுகளில் பெரும்பாலும் எம்.எஸ்.எம்.இ-க்களே முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் துணி உற்பத்தியில் பெரும் பகுதியானது எம்.எஸ்.எம்.இ-க்கள் கட்டுபாட்டிலேயே உள்ளன. குறிப்பாக விசைத்தறி மூலமாகவே வருகிறது. இவைதான் பெரிய ஆலைகளுக்கு மூலதனங்களாக உள்ளன.

கார்மென்ட்ஸ்களில் வித விதமாக தைக்க டெய்லர்கள், கட்டிங் மாஸ்டர்கள், அயர்னிங் மாஸ்டர்கள், பேக்கேஜிங் என பல பிரிவுகளாக உள்ளது. இதை பெரிய பெரிய நிறுவனங்களும் கையாள்கின்றன என்றாலும், பெரிய அளவில் சிறு நிறுவனங்கள் ஆர்டர் எடுத்து தைத்துக் கொடுக்கின்றன. இதன் மூலம் பெண்கள் அதிகளவில் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். தையல் வேலையில் மட்டும் அல்ல, அதில் வரையப்படும் எம்ப்ராய்டரி தொடங்கி, பேக்கேஜிங் வரையில் பெண்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

அதேசயம் பிரிண்டிங் உள்ளிட்ட அம்சங்களும் இங்கு தான் செய்யப்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் பிரிண்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில் நுட்ப வசதிகள் இருந்தாலும், இன்றளவிலும் மனிதர்களை வைத்து கையால் செய்யப்படும் பிரிண்டுகளுக்கு மவுசு அதிகம். இது திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மிக பிரதானம்.

எந்த மாவட்டத்தில் என்ன பிரதானம்?

குறிப்பாக தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், மாவட்டங்களில் ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் அதிகம். குறிப்பாக திருப்பூருக்கு அருகில் உள்ள பல்லடம், சோமனூர், சூலூர், அவிநாசி போன்ற பகுதிகளில் விசைத்தறிகள் அதிகம். இங்கு தான் கிரே காடா துணியில் சுமார் 30% இந்தப் பகுதிகளில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது.

ஈரோடு மாவட்டமும் கைத்தறி, விசைத்தறி மற்றும் துணி பதப்படுத்துதலுக்கு மிகவும் பிரபலம். பிரதானமாக பள்ளிபாளையம், குமாரபாளையம், பெருந்துறை, சென்னிமலை ஆகிய இடங்களில் விசைத்தறிகள் அதிகம். உற்பத்தி செய்யப்படும் துணிகள், சாயம் பூசப்பட்ட துணிகள், லுங்கிகள், வேட்டிகள் மற்றும் வீட்டு உபயோக ஜவுளிகள் என பலவற்றையும் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட சில பகுதிகளில் விசைத்தறி பட்டறைகள் அதிகம். இங்கு வேட்டி, சேலைகள், லுங்கிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சேலம் இளம்பிள்ளை, வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டு சேலைகள். சேலைகள் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அங்கிருந்து ஏற்றுமதியும் அதிக அளவில் செய்யப்படுகிறது.

கரூர் மாவட்டத்திலும் வீட்டுக்கு தேவையான ஜவுளிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கிருந்து விசைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் துணிகள் பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

உற்பத்தி & ஏற்றுமதி எவ்வளவு?

தமிழக ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை துறை, 2024 - 2025ம் நிதியாண்டில் சுமார் 7.99 பில்லியன் டாலர் அளவுக்கு செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 26.8% ஆகும். இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் தமிழ் நாட்டின் ஜவுளி ஏற்றுமதியானது, கடந்த நிதியாண்டில் முந்தைய ஆண்டை காட்டிலும் 12% அதிகரித்துள்ளது. 2024 - 2025ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதி சுமார் 36.61 பில்லியன் டாலராகும்.

இதில் எம் எஸ் எம் இ-க்களின் பங்கு மிகப்பெரியது. குறிப்பாக திருப்பூரின் மொத்த ஏற்றுமதியில் 90%-க்கும் அதிகமான நிறுவனங்கள் எம்.எஸ்.எம்.இ-க்களின் கீழ் வருகின்றன.

மொத்தத்தில் தமிழகத்தின் ஜவுளி ஏற்றுமதி வளர்ச்சிக்கு எம்.எஸ்.எம்.இ-களின் பங்களிப்பு தான் அடித்தளம் எனலாம். அரசு அளிக்கும் பிஎல்ஐ (PLI) போன்ற ஊக்குவிப்புத் திட்டங்கள், இந்த எம்.எஸ்.எம்.இ-களுக்கு ஆதரவாக இருக்கும் போது, தமிழகத்தின் ஜவுளி ஏற்றுமதி வரும் ஆண்டுகளில் மேலும் பல மடங்கு உயரும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+