Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1.40 கோடி குழந்தைகளுக்கு பசி, ஊட்டச்சத்தில்லை: மரணத்தை நோக்கி 10 லட்சம் குழந்தைகள்: யூனிசெஃப் வேதனை

Subscribe to Oneindia Tamil

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நேட்டோ படைகள் வெளியேறி தாலிபான்கள் ஆட்சி அமைந்தப்பின் மக்களின் வாழ்வாதாரம் அதள பாதாளத்துக்கு சென்றுவிட்டது, உலக நாடுகள் கைவிரித்த நிலையில் அங்கு நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக 95% ஆப்கன் மக்கள் உணவு கிடைக்காமல் வாடும் நிலை, ஊட்டச்சத்துக் குறைவு, பட்டினி, வறுமையால் 1.40 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வறுமை பசிக்கொடுமையால் மரணத்தை நோக்கி 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இருப்பதாக யுனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது.

1.40 crore Children starvation, malnutrition: 10 lakh children on the verge of death: UNICEF worry

வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒருவருக்கு அடிமை

நீண்ட ஆண்டுகளாக ரஷ்யா பின்னர் அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் ஆப்கான் இருந்துள்ளது. இடையில் தாலிபான்கள் ஆதிக்கமும் இருந்தது. இந்நிலையில் திடீரென அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியேறின. அது நடந்த சிலமணி நேரத்தில் தாலிபான்கள் ஆப்கனை ஆக்கிரமித்தார்கள்.

அமைதியான வாழ்க்கையில் விழுந்த அடி...கண்ணீர்தான் வாழ்க்கையா?

அதுவரை அமைத்தியாக வாழந்த ஆப்கன் மக்களின் வாழ்க்கையில் இடிவிழுந்தது. தாலிபான்களின் பிற்போக்குத்தனமும், பெண்கள் குறித்த பார்வையும், பெண்கள் கல்வி பயிலுவது, வேலைக்குச் செல்வது உள்ளிட்டவற்றில் கொண்டுவந்த கட்டுப்பாடுகளும், திடீரென ஆட்சியைப்பிடித்த தாலிபான்களின் முந்தைய செயலை வைத்து உலக நாடுகளின் உதவி நிறுத்தப்பட்டதாலுமிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியை ஆப்கன் சந்தித்தது.

1.40 crore Children starvation, malnutrition: 10 lakh children on the verge of death: UNICEF worry

ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்த மக்கள், அனைத்தும் போனது

ஒரே நாளில் அனைத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்தனர் சாதாரணமக்கள். தலிபான்கள் இடைக்கால முஸ்லிம் எமிரேட் ஆட்சியை உருவாக்கினர். கடந்த முறை ஆட்சியைப் போல் மோசமாக இருக்காது, பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும், பொருளாதாரம் சீரமைக்கப்படும் எனத் தெரிவித்தாலும் நடைமுறையில் அது வரவில்லை என்பதுதான் அங்குள்ள நிலை.

1.40 crore Children starvation, malnutrition: 10 lakh children on the verge of death: UNICEF worry

தாலிபான்கள் ஆட்சியால் தலைகீழான வாழ்க்கை

ஆனால், தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின் ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் நாளுக்கு நாள் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் கடும் விலை ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, வறுமை, பட்டினி போன்றவை ஆப்கானிஸ்தானில் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. உணவுக்காக வீட்டிலுள்ள அத்தியாவசியப்பொருட்களை விற்ற மக்கள், பெற்ற குழந்தைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட நிலையும் செய்தியாக வெளியானது.

95% பேர் போதிய உணவில்லாமல் வாடும் நிலையில் ஆப்கன்

உலக நாடுகள் பொருளாதார உதவியை தராமல் புறக்கணித்துள்ள நிலையில் ஐ.நா. மற்றும் உலக சுகாதார அமைப்பு மட்டும் மனிதநேய அடிப்படையில் உதவிகளை வழங்கி வருகின்றன. ஆப்கானிஸ்தானில் வாழும் மக்களில் 95 சதவீதம் பேருக்கு போதுமான உணவு இல்லை. 2.30 கோடி மக்கள் பட்டினியின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். யுனிசெப் அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானில் 1.40 கோடி குழந்தைகளுக்கு உணவுப்பற்றாக்குறை நிலவுகிறது, 50 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் பஞ்சத்தால் குழந்தைகள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து நீரை சேமிக்கும் நிலை, பதின்பருவ பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்தி கட்டாய திருமணம் செய்யும் நிலை, கடும் குளிர்காலம் ஆரம்பித்த நேரத்தில் போதிய உடைகள் கூட இல்லாத நிலை என கடும் பிரச்சினையில் குழந்தைகள் சிக்கியுள்ளனர்.

1.40 crore Children starvation, malnutrition: 10 lakh children on the verge of death: UNICEF worry

கண்ணீர் வரவழைக்கும் ஆப்கன் குழந்தைகளின் மோசமான நிலை

இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் டோலோ சேனலுக்கு யுனிசெஃப்பின் ஆதரவு மற்றும் மக்கள் நலக்குழுவின் தலைவர் சாம் மோர்ட் அளித்த பேட்டியில், " சர்வதேச உலக குழந்தைகள் தினத்தை நாம் கொண்டாடுகிறோம். ஆனால், ஆப்கனில் குழந்தைகள் நிலையை பார்க்கும்போது அப்படி கொண்டாடமுடியாது, அங்கு குழந்தைகள் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது.

1.40 கோடி குழந்தைகள் பட்டியால் பாதிப்பு

1.40 கோடி குழந்தைகள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 லட்சம் குழந்தைகளுக்கும் அதிகமானோர் ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணத்தின் பிடியில் இருக்கிறார்கள்" என்று வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

சர்வதேச உதவி இல்லாவிட்டால் ஆப்கன் குழந்தைகள் நிலை கவலைக்கிடமாகும்

ஆப்கனில் பொருளாதாரம் மோசமடைந்ததால், ஏராளமான குழந்தைகள் காபூல் தெருக்களில் குழந்தைத் தொழிலாளர்களாக வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிறிய குழந்தைகள் படிப்பை நிறுத்திவிட்டு சிறிய வேலைக்குச் சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க உதவக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். பல குழந்தைகள் விற்கப்பட்டுள்ளன. சர்வதேச உதவிகள் வராவிட்டால், ஆப்கனில் சூழல் இன்னும் மோசமாகும், குழந்தைகள் நிலை கவலைக்கிடமாகும்" என ஆப்கன் ஊடகங்கள் கவலைத் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+