உடலுறவுக்கு பிறகு காதலனே வேட்டியால் இறுக்கி கொன்ற கொடுமை.. 13வயது சிறுமி மரணத்தில் விலகிய மர்மம்
13 வயது சிறுமியை கொன்ற காதலன் கைது செய்யப்பட்டார்
மயிலாடுதுறை: 13 வயது சிறுமி மரணத்தில், ஒரு வாரம் கழித்து உண்மை வெளியே வந்துள்ளது.. காதலித்த இளைஞரே உடலுறவுக்கு பிறகு, சிறுமியை வேட்டியால் கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது.
Recommended Video
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வில்லியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன்... இவரது மகளுக்கு 13 வயதாகிறது.. அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி இரவு 9 மணிக்கு, தன்னுடைய மாமா பாலசுப்ரமணியன் வீட்டிற்கு சென்று வருவதாக சொல்லி உள்ளார்..
அதற்கு பிறகு அங்கு சென்றவர் மறுபடியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் பதறிப்போய், பாலசுப்ரமணியன் வீட்டிற்கு சென்றனர்.. ஆனால், அங்கு சிறுமி வரவே இல்லை என்று சொன்னதால் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.. அந்த பகுதி முழுக்க தேடி அலைந்து பார்த்துவிட்டு, இறுதியில் குத்தாலம் போலீசுக்கு சென்று புகார் தந்தனர்.

சடலம்
அந்த புகாரின்பேரில் போலீசாரும் சிறுமியை தேட தொடங்கினர்.. அப்போதுதான், பாலசுப்ரமணியன் வீட்டிற்கு பின்னால் ஓடிக்கொண்டிருந்த கால்வாயில் சிறுமி சடலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்... சிறுமியின் சடலத்தை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.. மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்... தனிப்படை போலீசார், வில்லியநல்லூர் கிராமத்தில் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்...

சந்தேகம்
ஆனால் எந்தவித க்ளூவும் கிடைக்கவில்லை.. சிறுமியின் உடலை வாய்க்காலில் இருந்து உறவினர்கள் வீட்டிற்கு தூக்கி வந்துவிட்டதால் வாய்க்காலில் தடயங்களும் எதுவும் கிடைக்கவில்லை... எனவே, சந்தேகத்திற்கிடமான சிலரை மட்டும் கண்காணிப்பு வளைத்தில் கொண்டுவந்து ரகசியமாக போலீசார் கண்காணித்து வந்தனர். இதனிடையே மருத்துவ பரிசோதனை அறிக்கையும் வெளிவந்ததையடுத்து, சிறுமியின் சந்தேக மரணம் வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது... அதற்குள் இந்த தகவல் ஊருக்குள் பரவியது.. அந்த நேரத்தில், சிறுமியின் தெருவைச் சேர்ந்த பிரபாகர் என்ற இளைஞர் பஸ்ஸில் ஏறி ஊருக்கு சென்றார்..

உடலுறவு
பிரபாகருக்கு 25 வயதாகிறது. இதை அறிந்த போலீசார், அவரை தப்பிக்க விடாமல் செய்து, மடக்க பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போதுதான் அவர் தந்த வாக்குமூலத்தை பார்த்து போலீசார் அதிர்ந்துவிட்டனர்.. அந்த சிறுமியை பிரபாகர் காதலித்து வந்துள்ளார்.. பலமுறை உடலுறவும் கொண்டுள்ளார்.. சம்பவத்தன்றும் சிறுமியை தனியாக வரச்சொன்ன பிரபாகர், வாய்க்கால் அருகே உடலுறவு கொண்டுள்ளார்.

வேட்டி
பிறகு, அந்த பகுதியில் உள்ள இளைஞர்களுடன் சிறுமி சகஜமாக பேசுவதை பிரபாகர் கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.. அப்போது வந்த ஆத்திரத்தில் தான் கட்டியிருந்த வேட்டியால் சிறுமியின் கழுத்தை நெறித்துள்ளார். இதில் மயக்கமடைந்த சிறுமியை வாய்க்காலில் தூக்கிப்போட்டு விட்டார்.. வாய்க்காலில் நீர் நிறைந்து கிடந்தது.. இதனால் அதில் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்... இதை பார்த்தபிறகுதான் அங்கிருந்து பிரபாகர் கிளம்பி சென்றுள்ளார்..

மர்மம் விலகியது
அதற்குள் குடும்பத்தில் எல்லாரும் சிறுமியை தேடுவதை அறிந்து தானும் , அவரை தேடுவது போல நடித்துள்ளார்... இதையடுத்து பிரபாகரை போலீசார் கைது செய்து, நாகப்பட்டினம் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் ஜெயிலில் அடைத்தனர்... கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து சிறுமியின் கொலை விவகாரத்தில் மரமம் நீங்கியுள்ள நிலையில், பெரும் அதிர்ச்சியை இந்த சம்பவம் ஏற்படுத்தி வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications