7 ஆண்டுகளுக்கு முன் மயிலாடுதுறை ரங்கநாதர் கோயிலில் வெள்ளி படிச்சட்டம் திருட்டு.. 2 தீட்சிதர்கள் கைது
மயிலாடுதுறை: மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோயிலில் மரத்தினால் செய்யப்பட்டு வெள்ளி தகடுகளால் கவசம் இடப்பட்ட படிச்சட்டத்தை திருடியதாக இரு அர்ச்சகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை பகுதியில் உள்ள பிரபலமான பரிமள ரெங்கநாதர் கோவில். இந்த கோவிலில் மரத்தினால் செய்யப்பட்டு, அதன் மேல் வெள்ளித் தகடுகளால் வேயப்பட்ட படிச்சட்டம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போனது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் சுமார் 7 ஆண்டுகளுக்குபிறகு, அந்த படிச் சட்டத்தை திருடியதாக 2 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் படிச்சட்டத்தை கழற்றி எடுத்து, அதை ஒரு நகைக் கடையில் விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக புகாரின் பேரில் ஸ்ரீநிவாச ரெங்கநாத பட்டர், முரளிதர தீட்சிதர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், விற்பனை செய்யப்பட்ட படிச்சட்டமும் மீட்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். நீதிமன்றம் அவர்கள் 2 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications