முகத்தில் தெளித்த சாரல்...
சட்டவிரோதமாக இந்திய கடல்பகுதியில் நுழைந்ததால் பிடிபட்ட இலங்கை சரக்குக் கப்பல் மாயம்
திருவனந்தபுரம்:
சட்டவிரோதமாக இந்திய கடல்பகுதிக்குள் நுழைந்ததால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை சரக்குக் கப்பல் திடீரென்று காணாமல் போய்விட்டது.
மிகப் பழமையான அக் கப்பல் கடலில் ழ்கியிருக்கலாம் அல்லது, அதிகாகளுக்குத் தெயாமல் கப்பலில் இருந்தவர்கள் கப்பலை ஓட்டிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
1972-ம் ஆண்டு கட்டப்பட்ட ஹமாயா-4 என்ற பெயருடைய அக் கப்பல், பிப்ரவ 12-ம் தேதி 300 டன் கச்சா எண்ணெயை ஏற்றிக் கொண்டு 9 பேருடன் துபாய்க்குச் சென்று கொண்டிருந்தது.
திடீரென்று இன்ஜின் பழுதானது. பிறகு இன்ஜின் சசெய்யப்பட்டது. ஆனால், நிடுக்கடலில் செல்லாமல், இந்திய கடற்கரையோரமாகப் பயணம் செய்ய கப்பல் கேப்டன் கிறிஸ்டி பெரைரா டிவு செய்தார். அதன்படி இந்தியக் கடற்கரையோரமாக இக் கப்பல் பயணம் செய்தது. இந் நலையில், கப்பலில் உணவுப் பொருள் தீர்ந்து போனது.
இதையடுத்து, பிப்ரவ 16-ம் தேதி கேரள மாநலம் கொச்சுதுரா துறைகம் அருகே கப்பல் நிங்கூடமிட்டு நறுத்தப்பட்டது. கப்பலில் இருந்து மீனவர்கள் உதவியால் இரு உதவியாளர்களுடன் நிகருக்குள் வந்தார் கேப்டன்.
இந் நலையில், உத்தரவில்லாமல் இந்தியக் கடற்பகுதிக்குள் நுழைந்தது மட்டுமில்லாமல் நிங்கூரமிட்டு கப்பல் நறுத்தப்பட்டதை அடுத்து கேரள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பலனாக, உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு கப்பலுக்குத் திரும்பும் வழியில் கேப்டனும் அவரது இரு உதவியாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
பறிதல் செய்யப்பட்ட கப்பல் கொச்சுதுரா துறைகத்தில் கப்பல் நறுத்தப்பட்டது. அதில் 6 ஊழியர்கள் இருந்தனர். இந் நலையில், அக் கப்பல் காணாமல் போய்விட்டது. கப்பல் காணாமல் போனது குறித்து துறைக அதிகாகளிடம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் தெவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை கப்பலில் இருந்தவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், அதன் பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும் துறைக அதிகாகள் தெவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications