வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஷார்ஜா கிக்கெட்: பாகிஸ்தான் 196 ரன்கள் - குளூசனருக்கு 5 விக்கெட்டுகள்
ஷார்ஜா:
கோக-கோலா கோப்பைக்காக ஷார்ஜாவில் தென் ஆப்பிக்காவுக்கு எதிராக வெள்ளிக்கிழமை நிடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் 196 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிக்க வீரர் லான்ஸ் குளூசனர் சிறப்பாகப் பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி தலில் பேட் செய்தது. வியாழக்கிழமை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியுற்றதை அடுத்து இப் போட்டியில் வென்றாக வேண்டும் என்ற நலையில் பாகிஸ்தான் இருந்தது. இம்ரான் நிசீரும், அஃபிதியும் துவக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். வழக்கம் போல அபிதி விரைவில் அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 14.
அடுத்து வந்த யூனிஸ் கான் நதானமாக விளையாடினார். அவரும், இம்ரான் நிசீரும் நின்றாக விளையாடி 2-வது விக்கெட்டுக்கு121 ரன்கள் குவித்தனர். ஆனால், குளூசனர் பந்து வீச வந்த பிறகு பாகிஸ்தானின் ரன் சேகப்பு குறைந்தது. இம்ரான் நிசீரையும், யூனிஸ் கானையும் குளூசனர் அவுட்டாக்கினார். அவர்களுக்குப் பிறகு வந்த வீரர்கள் யாரும் நன்று விளையாடவில்லை. அப்துர் ரசாக் மட்டும் ஓரளவு ஆடி 23 ரன்கள் குவித்தார். வீரர்கள் தொடர்ந்து அவுட்டாகிவாறு இருந்ததால் பாகிஸ்தானால் அதிக ரன்களைக் குவிக்க டியவில்லை.
இறுதியில் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. குளூசனர் சிறப்பாகப் பந்து வீசி 10 ஓவர்களில் 47 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எல்வொர்த்தி 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.


Click it and Unblock the Notifications
