வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
எய்ட்ஸ் நோய்க்கு சித்த மருத்துவத்தில் மருந்து: தமிழக அரசு திட்டம்
சென்னை:
எய்ட்ஸ் நோய்க்கு சித்த மருத்துவத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்தின் குணங்களை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இம்முயற்சி வெற்றி பெற்றால் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்த பெருமை தமிழகத்தைச் சாரும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.
சட்டசபையில் புதன்கிழமை நடந்த கேள்வி நேரத்தில் நடந்த விவாதம் குறித்த விபரம் வருமாறு
குமாரதாஸ் (த.மா.கா.): பழமைமிக்க மூலிகை குணங்கள் கொண்ட மஞ்சள், வேம்பு, பூண்டு போன்ற பொருட்களுக்கு காப்புரிமை (பேடன்ட்) பெற அமெரிக்கா முனைந்துள்ளது. சித்த மருத்துவத்தில் நாம் பயன்படுத்தும் பொருட்களுக்கு இதுபோல் உரிமை பெற அரசு முயற்சிக்குமா?
அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி: தனிப்பட்ட சிலர் காப்புரிமை (பேடன்ட்) பெற கோரிய போது அதை அரசு அனுமதிக்கவில்லை. எனவே அமெரிக்காவுக்கு அனுமதி கிடைக்கும் வகையில் அரசு நடந்து கொள்ளாது. சித்த மருத்துவத்தில் நாம் பயன்படுத்தும் பொருட்களுக்கு காப்புரிமை பெறுவது பற்றி மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்படும்.
டி.மணி (மார்க்சிஸ்ட்): சித்த மருத்துவ முறை அதிகமுள்ள பகுதிகளில் மூலிகைப் பண்ணை அமைக்கப்படுமா?
அமைச்சர்: ஏற்கனவே இதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன.
தாமரைக்கனி (அதிமுக) மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்கமுடியுமா? முடியாதா?
அமைச்சர்: மூலிகை மூலம் பெட்ரோல் தயாரித்தவர் சிறையில் இருக்கிறார். எனவே அந்த முயற்சியில் தாமரைக்கனி ஈடுபடவேண்டாம்.
டாக்டர் ராமன்: சித்த மருத்துவத்தின் மூலம் எய்ட்ஸ் நோய்க்கு சென்னை தாம்பரத்தில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதே. அந்த மருந்துக்கு என்ன உரிமை பெறப்பட்டுள்ளது?
அமைச்சர்: அந்த மருந்தை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். எனவே அந்த முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இப்பொறுப்பு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிரூபிக்கப்பட்டால் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெருமை தமிழகத்தைச் சேரும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications