வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

த.ரா.கா. கட்சியை கூட்டணியில் வைத்திருப்பது குறித்து முதல்வர் முடிவு செய்வார்: ராமதாஸ்

சென்னை:

தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வைத்திருப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து முதல்வர் கருணாநிதி முடிவு செய்வார் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் பாத்திமா பீவியை புதன்கிழமை சந்தித்து மனு கொடுத்த பிறகு நிருபர்களிடம் அவர் பேசியதாவது:

நாங்கள் இனிமேல் தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியைப் பற்றியோ அல்லது கட்சித்தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி பற்றியோ எதுவும் விமர்சனம் செய்யமாட்டோம்.

தமிழ்நாட்டில் அடுத்த சட்டசபைத் தேர்தலிலும் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயேதான் இருப்போம். செவ்வாய்க்கிழமை மாலை நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் வாழப்பாடி ராமமூர்த்தி கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். முதல்வர் அக்கூட்டத்தில் இரு கட்சிகளிடையே உள்ள பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கு வாழப்பாடி ராமமூர்த்தி ஒத்துழைக்க மறுத்து விட்டார் என்றார் ராமதாஸ்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+