வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கோகோ-கோலா கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இறுதி ஆட்டத்துக்கு பாகிஸ்தான் தகுதி
ஷார்ஜா:
கோக-கோலா கோப்பைக்காக ஷார்ஜாவில் நடைபெற்று வரும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரில் இறுதி ஆட்டத்துக்குப் பாகிஸ்தான் தகுதி பெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடைசி சுற்றுப் போட்டியில் அந்த அணி தென் ஆப்பிரிக்க அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
திங்கள்கிழமை நடந்த போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்ததன் மூலம் தனது இறுதிப் போட்டிக்கான வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொண்ட பாகிஸ்தான், அதிக நெட் ரன்விகித அடிப்படையில் தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியில் தோற்றாலும் இறுதிப் போட்டியில் நுழைந்துவிடலாம் என்ற நிலையில் இருந்தது.
முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. தென் ஆப்பிரிக்க வீரர்களின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். காலிஸ், கேப்டன் குரோனி இல்லாத நிலையிலும், வில்லபி, குளூசனர் ஆகியோர் சிறப்பாகப் பந்து வீசி பாகிஸ்தான் வீரர்களை அவுட்டாக்கினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 49.2 ஓவர்களில் 168 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. யூசுப் யுகானா மட்டும் நின்று ஆடி 65 ரன்கள் எடுத்தார். இந்தியாவுக்கு எதிராக திங்கள்கிழமை நடந்த போட்டியிலும் இவர் அரை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் தோல்வி
இது நாள் வரை பாகிஸ்தானுடன் நடந்த போட்டியில் தோல்வியே கண்டறியாத தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் களமிறங்கியது. வழக்கம் போல ஹெர்ஷல் கிப்ஸ் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். இருப்பினும் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் ஷோயிப் அக்தர், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஆகியோரது சிறப்பான பந்து வீச்சினால் தென் ஆப்பிரிக்க அணி சரிவுக்குள்ளானது.
ஷோயிப் அக்தர் தான் வீசிய ஒரு ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்ஆப்பிரிக்காவை மீளமுடியாத சரிவுக்கு உள்ளாக்கினார். இறுதியில் 26.5 ஓவரில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தானிடம் முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா தோல்வியுற்றது.
கிப்ஸ் மட்டும்ஓரளவு நின்று ஆடி 59 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அதுவும் 5 பேர் ரன் எடுக்காத நிலையில் அவுட்டானார்கள். ஷோயிப் அக்தர் 4.5 ஓவரில் 9 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வக்கார் யூனிஸ், அப்துர் ரசாக் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் வாசிம் அக்ரம் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்குப் பாகிஸ்தான் தகுதி பெற்றது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா ஏற்கெனவே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது.
இப் போட்டித் தொடரில் கலந்து கொண்ட மூன்றாவது அணியான இந்தியா ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்றதால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications