முகத்தில் தெளித்த சாரல்...
பல மாநில சட்டசபைகளிலிருந்து, ராஜ்ய சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, தங்கள், தங்கள் கட்சிகளை மீறி பலஎம.எல்.ஏ.க்கள் ஓட்டளித்திருக்கிறார்கள். குறிப்பாக, மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியிலும், உத்திரப் பிரதேசத்தில்பா.ஜ.க.விலும் இந்தக் கட்சி மீறிய ஓட்டு கணிசமான அளவில் விழுந்திருத்கிறது.
இது, இந்த இரு கட்சிகளின் தலைமைகளுக்கு பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் தந்திருக்கிறது- என்ற செய்திதான்சிரிப்புக்குரியது.
தங்கள் கட்சிகள் மிகவும் நேர்மையான முறையில், கொள்கை பிடிப்புடன், நடத்திச் செல்லப்படுவது போலவும், அதில் இப்போதுஒரு வக்ரம் தோன்றி, அதிர்ச்சியளியப்பது போலவும் பேசுகிறார்கள்.அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளக் கூடஇந்தப் பசப்பு பயன்படாது.
மற்ற கட்சிகளுக்கு இணையாக இந்த இரு தேசிய கட்சிகளின் தலைமை நடத்தாத கூத்து என்ன மீதமிருக்கிறது? வேட்பாளர் ; ஜாதிஅடிப்படையில்; தேர்தல் பிரச்சாரம் - பணத்தை நம்பி ; அரசியல் பணி - வன்முறையின் மூலம்; கூட்டணி அமைப்பது -வியாபாரம் அடிப்படையில்... என்று காங்கிரஸ் , பா.ஜ.க. தலைமைகள் செயல்பட ஆரம்பித்த பிறகு, கட்சியில் இவர்கள் என்னகட்டுப்பாட்டை எதிர்பார்க்க முடியும்.?
தேர்தலோடு முடிகிறதா இந்த விவஸ்தை கெட்டதனம்? ஆட்சி அமைக்க அலைகிற அலைச்சலும், பேசுகிற பேரங்களும் கொஞ்சநஞ்சமல்ல. தேர்தலில் எந்தக்கட்சி கடுமையாக எதிர்க்கப்பட்டதோ, அதன் ஆதரவை நாடிப் பெற்று ஆட்சி அமைக்கவும் இந்தத்தலைமைகள் தயார்.
வேட்பாளர் தேர்வு, மந்திரி பதவி , கட்சி பதவி - எதுவாக இருந்தாலும் வேண்டியவர் வேண்டாதவர் அடிப்படையில்வினியோகிக்கப் படுகிறது. தலைமை இவ்வளவு நெறி கெட்டு அலைகிற போது கட்சியில் மற்றவர்கள் கட்டுப்பாட்டுடன்செயல்பட வேண்டும் என்று எதிர் பார்ப்பது என்ன நியாயம்?
பணம் விளையாடி விட்டது; பணத்தை வாங்கிக் கொண்டு கட்சி மாறி ஓட்டளித்திருக்கிறார்கள் என்று பொருள் பட , ராஜ்ய சபைத்தேர்தலில், மாறி ஓட்டளித்த தங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் பற்றி காங்கிரஸ், பா.ஜ.க. தலைமைகள் விமர்சித்திருக்கிறன. இதில்என்ன அதிசயம்? இப்படித்தான் நடக்கும்.
பணத்ததை நம்பியே தேர்தலை நடத்தி, ஒரு ஆட்சியைக் காப்பாற்றவும், கவிழ்க்கவும் பணத்தை நம்பியே செயல்பட்டு வருகிறதலைமைகளின் கீழ் இருப்பவர்தள், பணத்திற்கு விலை போகாமல் இருப்பார்களா?
மாநிலக் கட்சிகள் பல, சீரழிந்து இருப்பது துரதிர்ஷ்டவமானது என்றால், அந்தக் கடசிகளுக்கு நிகராக இந்த இரு தேசியக்கட்சிகளும் சீர் கெட்டு கிடப்பது ஒரு சாபக்கேடு. இதில் பா.ஜ.க.வின் நெறி வீழ்ச்சி - வருத்ததிற்குரியது. ஆட்சிக்காக அக்கட்சித்தலைமை அலையத் தொடங்கிய போதுதான், இந்த நெறி வீழ்ச்சி ஆரம்பித்தது.
அதனால்தான் கட்டுப்பாடு குலைந்தது. அதனால் தான் பா.ஜ.க. மற்றொரு காங்கிரஸ் ஆகியிருக்கிறது. அதனால் தான் ராஜ்ய சபைதேர்தலில், காங்கிரசுக்குப் போட்டியாக பா.ஜ.க.விலும் குறுக்கு ஓட்டு விழுந்திருக்கிறது. இப்படி ஓட்டளித்த எம்.எல்.ஏ.க்கள்-நோயின் அறிகுறி. கட்சித் தலைமை கட்சியை நடத்திச் செல்கிற விதம் தான் நோயின் மூலம்.
மற்ற கட்சிகளைப் பொறுத்தவரையில், இந்த குறுக்கு ஓட்டு ஒரு பொருட்டே அல்ல. பொருளாதாரத்தைத் தனியார் மயம்ஆக்குவதற்கு முன்பாக, அரசியலை எல்லாக் கட்சிகளும் சேர்ந்து தனியார் மயமாக்கி விட்டன. தனி மனிதர்களின் கம்பெனிகள்,அரசியல் கட்சிகள் என்ற பெயரில் இயங்குகின்றன. தனியார் துறை என்றால், சந்தைதான் அதற்கான இலக்கணத்தை வகுக்கும்.சந்தைப் பொருளாதாரத்தில், பணம் விளையாடத்தான் செய்யும்; ஆடு, மாடு விலை போகத்தான் செய்யும்; ஆகையால்எம.எல்.ஏ.க்கள் விலை போனதில் அதிர்ச்சசியுறுவதற்கு எதுவுமில்லை.
மற்ற கட்சிகளைப் பொறுத்தவரையில், இந்த குறுக்கு ஓட்டு ஒரு பொருட்டே அல்ல. பொருளாதாரத்தைத் தனியார் மயம்ஆக்குவதற்கு முன்பாக, அரசியலை எல்லாக் கட்சிகளும் சேர்ந்து தனியார் மயமாக்கி விட்டன. தனி மனிதர்களின் கம்பெனிகள்,அரசியல் கட்சிகள் என்ற பெயரில் இயங்குகின்றன. தனியார் துறை என்றால், சந்தைதான் அதற்கான இலக்கணத்தை வகுக்கும்.சந்தைப் பொருளாதாரத்தில், பணம் விளையாடத்தான் செய்யும்; ஆடு, மாடு விலை போகத்தான் செய்யும்; ஆகையால்எம.எல்.ஏ.க்கள் விலை போனதில் அதிர்ச்சசியுறுவதற்கு எதுவுமில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications