For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

மகள் பாரதி (பாரதி தேவி) வந்திருந்தாள்.

அவள் வரும் போதெல்லாம் ஊர் நடப்புகளை சொல்லுவாள். கேட்கக் கதை போல இருக்கும்.

ஊருக்குப் போன பிறகும் அவள் சொன்ன நடப்புகள் காதில் ஒலித்துக்கொண்டேஇருக்கும். அந்த வட்டாரத் தமிழ் அப்படி ஊர்த் தண்ணிக்கு நாக்கு பழகனும்என்பார்கள்.

பாரதி சொல்லுகிறாள் கேட்போம்:

ஒரு அக்காளும் தங்கச்சியும் இருந்தாக. அக்காளுக்கு ஒரு ஆம்பிளைப்பிள்ளை.தங்கச்சிக்கு ஒரு பொம்பளைப்பிள்ளை. ரெண்டு பேருமே விதவைகள். ரொம்பஏழைகள். ஊத்த குடிச்சி உமி குடிச்சி ராவும் பகலும் பாடுபட்டு அவுகஅவுகபிள்ளைகளை வளத்து ஆளாக்கினாக.

பிள்ளைக இளந்தாரியும் குமரியுமா ஆகவும் கலியாணம் முடிச்சி வச்சாக. அக்காளுக்குஒரு மருமக வந்தா. தங்கச்சிக்கு ஒரு மருமகன் வந்தான்.

அக்காளுக்கும் அவ மருமகளுக்கும் ஒரே சண்டை. எதை எடுத்தாலும் மாமியா குத்தம்சொல்ல, மருமக எதுத்துப் பேச, இப்பிடி நித்தமும் சண்டைக்காடு முத்தி, குடுமிப்பிடிவரைக்கும் போயிடிச்சி.

இங்கிட்டு தங்கச்சிகாரிக்கும் அவ மருமகனுக்கும் இத்தினி கூட பிடிக்கல.அவுகளுக்குள்ளேயும் ஒரே சண்டைக்காடு. ஒரு மக இருக்கா. வீட்டோடமாப்பிள்ளைதேன் வேணும்ன்னு தேடித் தேடிப் பார்த்து இவனெக்கொண்டாந்தேனேன்னு தங்கச்சிக்காரி அழுவாத நாளு இல்ல.

இவுக சண்டையில மாமியாள அடிக்க முடியாத மருமகன், பொண்டாட்டியப் போட்டுஅடிக்கான். மக அடிவாங்கதப் பொறுக்க மாட்டாத மாமியா மருமவன எதுத்து நிக்க,மாமியாளையும் ஒரு நா வசமா கைய நீட்டி பெரிய ரச்சைக் கேடா ஆயிரிச்சி.

நித்தமும் இதே பொழப்பா போனதில, அக்காளுக்கும் தங்கச்சிக்கும் சேன்னு வீடேவெறுத்துப் போச்சி.

இனி என்ன செய்யன்னு ரெண்டு பேரும் கூடிப் பேசுனாங்க. அக்கா சொன்னா.

நாம பாடுபட்ட நாளெல்லாம் பட்டோம். நம்ம நெலம இப்பொ இப்பிடி ஆயிட்டது.இனி நாம கோயிலு கொளம்ன்னு போயி, அடுத்த பொறப்புலயாவது நல்ல பொறப்பாபொறக்கனும்னு சாமியக் கும்புடுவோம். இனி என்னத்த நாம திரும்பி வரப் போறோம். இப்பிடியே ஊரு ஊராகக் கோவிலு கொளமாப் போயி, சேர வேண்டியதுதாம்.

தங்கச்சியும் சொன்னா.

அது சரிதாம். இருட்டிருச்சின்னா, அங்கன கண்ட ஊர்ல ராத் தங்கி, விடியவும் அங்கனகிடைச்சத தின்னுட்டு நடப்போம். எம்புட்டு நாளானாலும் சரி திரும்பி இங்கெ வரவேகூடாது. வா. இப்பவே இப்பிடியே போயிடுவோம்ன்னு புறப்பட்டுட்டாக.

ரெண்டு நா நடந்து, வழியில வந்த மாட்டு வண்டியில,ஏறி வந்து சேந்தாக நல்லாஇருட்டிருச்சிஏகாலி கஞ்சிக்கு வார. நேரத்துக்குள்ள ஊரே அரவம் ஒடுங்கிப் போச்சி.முதல்ல தெரிஞ்ச வீட்டுக் கதவ தட்டினாக.

வீட்டுக்குள்ள படுத்திருந்தவுக, யாரு அது, நாங்க கதிரருப்புக்குப போயிட்டு வந்துஅலுத்துப் போயி உறங்குதோம். இந்நேரத்துக்கு வந்து கதவத் தட்டுதீகளேன்னு கதவத்தொறந்தாக.

இவுகளும், இப்பிடி இப்பிடி சங்கதி. கோயிலு குளம்ன்னு தேசாந்திரமா போறோம்.போற போக்குல கண்ணுல பட்ட வீட்டுல தங்கி அவுக ஊத்துற கஞ்சியக் குடிச்சிட்டுப்போவொம்.அதேம் இந்நேரம் கதவத் தடடுனோம்னாக. வீட்டுக்காரிக்கும்சந்தோசமாயிருச்சி,வாங்க, வாங்க நல்ல வேள வந்தீக. நாங்க பாடு பெரிசுன்னுஅலையுதோம். அதுலேயும் இப்ப கதிர் அறுப்பு நேரம்.

அதும் நெல்லுக் கதிரு. ஒரு நாளைக்கு கொத்து (கூலி) ஒரு மரக்கா நெல்லு. இதோடகடைச் செலவுக்கும் சேத்து ரெண்டு கையி அள்ளிப் போடுவாக. இப்ப ஓடி ஓடிக் கதிர்அறுத்தா வருசமெல்லாம் உக்காந்து சாப்பிடலாம். இந்த வருசம் நல்ல வெளச்சல்.உப்பளத்துல உப்ப அள்ளுனது கணக்க சனங்க நெல்ல அள்ளுதுக. அறுப்புக்குத்தேம்ஆளு கிடைக்க மாட்டேங்கு.

இப்பப் பிறந்த பிள்ளைவும் கண்ணு தெரியாத கிழவம் கிழத்தியவும் தவுத்து அம்புட்டுசனமும் வயக்காட்டுலதாம் கிடக்காக. அந்த அலுப்புலதேம் ஊரு மொத்தமும் இந்நேரத்துக்கே மொடங்கிருச்சின்னு சொல்லி, இவுகளுக்கி இருக்க சோத்த எடுத்துவச்சிவெஞ்சனத்த எடுத்து ஊத்துனாக.

அக்காளும் தங்கச்சியும் சாப்புட்டுப் படுத்தாக. விடியங்காட்டி, தலைக்கோழுகூப்பிடவும் ஊர்ச்சனம் மொத்தமும் எழுந்திருச்சி சாணி அள்ளவும் தண்ணிஎடுக்கவும்அப்படி அலையுதுக.

இந்த அக்காளுக்குத் தங்கையும் கூடமாட வேலை செய்யிறதப்பாத்தவீட்டுக்காரிஇம்புட்டு அழகா வேல பாக்கீகளெ, வயக்காட்டுக்காரம அறுப்புக்குஆளு இல்லாம பரிதவிச்சிக்கிட்டுவாராக. வாங்களேம் நீங்களும். நாலு நா கருதறுத்து,ஆளுக்கு நாலு மரக்கா நெல்லு கொண்டுகிட்டுப் போகலாங்கவும் இவுகளுக்கும்ஆசை வந்துவிட்டது.

அக்காகாரி தங்கச்சிகிடடெ சொன்னா ஏத்தா கோயிலுக்குப போறத தள்ளிப்போட்டுட்டுப் போனா சாமி என்ன இருந்த எடத்த விட்டுப போயிரவா போயிரப்போகுது. வா நாமும் இவுக கூட அறுப்புக்குப் போவம்ன்னு புறப்பட்டு போனாக.

இவுக வேல செய்யிற பாங்கைப் பார்த்த வயக்காட்டுச் சொந்தக்காரங்க சந்தோசத்துலமரக்கா நெல்லும் அளந்து போட்டு கூட நாலு கையி நெல்லும் அள்ளிப் போட்டு,நாளைக்து வந்துருங்கன்னாங்க.

    நாலைஞ்சி நா வேல செஞ்சதுல தலைச்சுமைக்கு மேல நெல்லு சேந்து போச்சி.அக்காவுக்கும், தங்கச்சிக்கும் இதுகள சுமந்துகிட்டே எப்பிடி கோவிலு குளம்ன்னுபோறது, ஊர்ல கொண்டி போட்டுட்டுப் போவம்ன்னு ஊருக்குத் திரும்பிப் போனாக.

    ரெக்கையும் அவனுடைய தகப்பனாரும் ஊர் காலில் விழுந்தார்கள்.அங்கே.....

நல்ல வேளை. இந்த ரெண்டு கிழடுகளும் போயித் தொலைஞ்சது. இருந்தா, எந்நேரமும் நை நையின்ன அரிச்சிக்கிட்டே கிடக்கும்னு சொல்லி வாய் மூடலே .... இந்தரெண்டு பெருசும் நெல்லுச்சுமையோட போய் நின்னாக.

மகன்கிட்ட, மகள்கிட்ட நெல்லைக் கொண்டு கொடுக்க, அவுளுக்கு நெல்லு பெரிசாத்தெரியல. இவுக வந்ததுதாம் தொந்தரவா தெரிஞ்சது. இனி வீட்டுக்கே வரமாட்டோம்னு போனீக. இப்போ எதுக்கு வந்தீகளாம். அப்பிடியே போகவேண்டியதுதானெ? வந்ததுதாம் தாமசம் தொடங்கி விட்டது சண்டை.

தப்பு நம்ம மேலதாம் என்று அக்காவும் தங்கையும் சொல்லிக்கிட்டாக.

மூக்குச் சளிய சிந்தி வீசி எறிஞ்சிட்டு முந்தனியில கண்ணெ தொடச்சிக்கிட், வாத்தாபோவம்னு புறப்பட்டாக.

ரெண்டு மூணுநா நடந்தாக.

ஒரு ஊரு குளத்தங்கரை பக்கம் கூட்டமாத் தெரிஞ்சதும் நடைய எட்டிப்போட்டாக.கூட்டமான கூட்டம். பயந்த மாதிரி இல்லெ. குளம் அழிஞ்சி மீனு பிடிக்காக ஊருமொத்தமும் குளத்துக்குள்ளே நிக்கி. மேலெல்லாம் சேறும் சகதியுமா, பிடிச்சி முடிஞ்சமீனு அம்பாரமா குவிஞ்சிருத்கு. அம்புட்டும் அயிரையும் கெளுத்தியுமா.ஆளுவாரியா பங்கு போட்டாக. வேடிக்கை பாத்தவுகளுக்கும் மீனு கிடைச்சது.

முந்தானையில மீனை கட்டிக்கிட்டு திரும்பு ஊரப்பாக நடந்தாக.

பச்சை நெல்லுச் சோத்துக்கும், மீன் கறிக்கும் கொண்டாட்டமா இருக்கும். பிள்ளைகஆசெ தீரச் சாப்பிடட்டும்னு போயி, இவுகளா நெல்லுக் குத்தி மீனு கறி ஆக்கினாக.ஊரே மணக்கு.

திரும்பி வார போதே ஊர்காரங்க கேலி பண்ணாங்க.காசி, ராமேஸவரத்துலஅக்காளையும் தங்கச்சியையும் பாத்ததாகச் சொன்னாக; அதுக்குள்ள இங்க வந்துநிக்கீக!

மீனு கறி அருவாகவும் பழைபடிக்கு சண்டை தொடங்கி விட்டது. சண்டையானசண்டையில்ல. காது கொடுத்துக் கேக்க முடியல.

கடவுளே, எங்கள கொண்டு போக மாட்டியா. எங்களுக்கு ஒரு சாவு வராதான்னுஅழுதுக்கிட்டே பழைய படிக்கு புறப்பட்டாக. வேற திசைய பாத்து.

எங்க போயி என்ன. நம்ம எணலு( நிழலு) நம்ம கூடத்தாம் வரும்ன்னுசொல்லிக்கிட்டே நடந்தாக.

போற பாதையில ஒரு ஊரு.

ஒவ்வொரு வீட்டுக்கு முன்னாடியும் அம்பாரம் அம்பாரமா நிலக்கடலை(மணிலா)செடி கட்டுக்கட்டா குமிஞ்சி இருக்கு. என்னன்னு இவுக விசாரிக்கவும் அவுகளும்இந்த வட்டம் இந்த ஊர்ல கடலை ரொம்ப நல்ல வாச்சிருக்கு. தூருக்கு அரைப்படிகடலைக்கு மேல இருக்கு. அதனால, பத்துக்கு ஒன்னுன்னு கொத்து போடுதாக. ஊரேதூங்காம கடலை ஆஞ்சிட்டுக் கிடக்கு.

நீங்களும் உக்காந்து ஆஞ்சா தலைச் சொமைக்கு மேல கடலை கிடைக்கும்ங்கவும்கோயிலையும் குளத்தையும் மறந்து உக்காந்து கடலை ஆய ஆரம்பிச்சாக.தின்னுகிட்டே ஆஞ்சாக; அம்புட்டு பசி. மத்தியில கஞ்சியும் கிடைச்சது. இவுக வேலசெய்யிற பாங்கப் பாத்து ஆச்சரியப்பட்டுப் போனாக. நல்ல வேலைக்காரங்கபோலன்னு நினைச்சி என்ன எவ்விடம் எங்க போறீகன்னு விசாரிச்சாக.

தேசாந்தரமா கோயிலு குளம்ன்னு புறப்பட்டுப் போறம்ன்னு சொல்லவும் உபசரிப்புபலமாயிட்டது. ரெண்டு நா தங்கி கடலை ஆஞ்சதுல ஆழுக்கு தலைச்சுமைக்கு மேலசேந்து போச்சி. ஆயும் போதே பேசிக்கிட்டாக. பச்சைக் கடலைய, கூட இம்புட்டு உப்புபோட்டு அவுச்சித் தந்தா பிள்ளைக பிரியமாச் சாப்புடும்.

மிச்சமிருக்க கடலையும் காயப் போட்டு எடுத்துவச்சி வறத்துக் கொடுத்தா, உறிஞ்சிஉறிஞ்சி கருப்பட்டியவும் கடிச்சிகிட்டுப் பிள்ளைக பிரியமா திங்குமென்னுநினைக்கவும் கடலைச் சுமையோட ஊரெப்பாத்து நடந்தாக. வீட்டெ நெருங்க நெருங்ககாலு பின்னலாடுது! நம்ம வீடு நாம போறோம் எந்தக் களுதையக் கேக்கணும்மனசுசொல்லுது. வீட்டுக்குள்ள போயி தலைச்சுமையை இறக்கவும் ...... காதுல விழுது.

தேசாந்திரம் போயி வந்தாச்சி

ஊரு ஒலகம் சுத்திப் பாத்தாச்சி

கோயிலு கொளத்துல தானம் (ஸ்னாம்) பண்ணி

சாமிகளத் தரிசனம் பண்ணி, பிரசாதம் கொணடந்

துருக்காக, விழுந்து சேவிச்சி பெத்துக்கிடுங்த!.

நாலு நா கழிஞ்சது.

தொடங்கி விட்டது சண்டைக்காடு.

வீட்டுத் தெருவுல கூட்டமான கூட்டம். விலக இடமில்ல. ஊரு அம்பல காரரு,மாட்டுக்கு புல்லறத்துக் கட்டுக்ட்டி தலைச்சுமையா கொண்டுகிட்டு வாரார். வழியவிடுங்களேம். போறவுக வரவுகளுக்கு இடைஞ்சலா ,,,

இடைஞ்சலா நிக்கிறதவுகதாம் இப்படிச் சொல்றங்க.

என்ன அம்பலக்காரய்யா, நீங்களாவது சண்டை பிடிச்சி இதுகளுக்கு புத்திசொல்லப்படாதா

அவரி சிரிச்சிக்கிட்டேஅட நீ ஒண்ணு . சண்டை இல்லேன்னா என்னப்பா இருக்கு.விடு. ஆட்டுக்கறியில அடிக்கிறதுதாம். கோழிக்கறயில கூடிக்கிறதுதாம். எநறுசொல்லிக்கொண்டே போனார் திரும்பிப் பார்க்காமலே.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X