தமிழகத்தில் இன்று
சந்திரிகா குறித்து புகார் கூறவில்லை: வைகோ மறுப்பு
மதுரை:
ஜெனீவாவிலுள்ள சர்வதேச மனித உரிமைகள் கமிஷனில் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா குறித்து தான் புகார் ஏதும் கூறவில்லை என்றுமறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் வைகோ கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நான் ஜெனீவாவில் பேசிய பேச்சு திரித்து வெளியிடப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்டுள்ளஇலங்கையில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து மட்டுமே நான் பேசினேன். அப்பாவி மக்கள் அதிக அளவு அங்கு உயிரிழந்து வருவது குறித்துமட்டுமே கூறினேன்.
இலங்கையில் அதிக அளவில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களை நேரில் அறிய பத்திரிகையாளர் குழுவை அங்கு அனுப்பலாம் என்று மட்டுமே நான்கூறினேன். அப்பாவி தமிழ் மக்களை மிரட்ட கற்பழிப்பு என்ற ஆயுதத்தை இலங்கை ராணுவம் பயன்படுத்தி வருகிறது.
இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சரைக் கொல்ல அயர்லாந்து பிரிவினைவாத அமைப்பு பல முறை முயன்றது. ஒவ்வொரு முறையும் அவர் உயிர்தப்பினார். இதையடுத்து அந்த அமைப்பு தாட்சருக்குப் போன் செய்து, அதிர்ஷ்டம் எப்போதுமே உங்கள் பக்கம் உள்ளது. ஆனால் எப்போதாவதுதான்எங்கள் பக்கம் உள்ளது என்று கூறியது. இதைத்தான் நான் ஜெனீவா கூட்டத்திலும் மேற்கோள் காட்டினேன்.
ஜெனீவா கூட்டத்தில் நான் பேசிய கருத்துக்கள் மதிமுகவின் சொந்த கருத்து. இதை, தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்லது மத்திய அரசின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. மதிமுகவின் பிரதிநிதியாகத்தான் ஜெனீவா கூட்டத்திற்கு நான் சென்றேன்.
பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று மதிமுக உறுதியாக நம்புகிறது.
இலங்கைப் பிரச்சினை பல்வேறு நெருக்கடிகளைக் கொண்டது. இதுதொடர்பாக தலையிடுமாறு மத்திய அரசை நான் வற்புறுத்துவது குறித்து இப்போது கூறமுடியாது. இப்போது மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இலங்கைப் பிரச்சினை குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications