தமிழகத்தில் இன்று
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும்: ஜெ.
சென்னை:
இந்திய கடற்பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அடிக்கடி இலங்கைகடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகப்பட்டினம் அருகே மூன்று தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:
ராமேஸ்வரம், நாகப்பட்டினம் கடற்பகுதியில் இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடிதுப்பாக்கிச் சூடு நடத்துவது அதிகரித்து வருகிறது.
இந்திய எல்லைப் பகுதியில் சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தால்தான் தமிழகமீனவர்கள் அடிக்கடி உயிரிழக்க நேரிடுகிறது. இதில் மாநில அரசும், மத்திய அரசும்நடந்து கொள்ளும் விதம் கண்டிக்கத்தக்கது.
இந்திய எல்லைக்குள், இலங்கைக் கடற்படையினர் ரோந்து வருகின்றனர். ஆனால்நமது கடற்படையினர் அங்கு இல்லை என்பது வியப்புக்குரியதாக உள்ளது. அவர்கள்என்னதான் செய்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.
இதுபோன்ற அலட்சியமான போக்கால் விலைமதிப்பற்ற தமிழக மீனவர்களின் உயிர்அடிக்கடி இலங்கை கடற்படையினரால் பறிக்கப்படுகிறது. இந்த நிலை எதிர்காலத்தில்தொடராமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்கவேண்டும்.
உயிரிழந்த மூன்று மீனவர்களின் குடும்பத்தினருக்கும் போதுமான நிவாரணத் தொகைவழங்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications