லண்டனில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவசரக் கூட்டம் துவங்கியது
லண்டன்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அவசரக் கூட்டம் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் செவ்வாய்க்கிழமை துவங்கியது, புதன்கிழமையும் இக் கூட்டம்தொடர்ந்து நடைபெறுகிறது.
சர்வதேச அளவில் கிரிக்கெட் வீரர்கள் மீது கூறப்பட்டு வரும் மேட்ச் ஃபிக்ஸிங், லஞ்சம் மற்றும் கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடன் கிரிக்கெட்வீரர்களுக்கு உள்ள தொடர்பு ஆகியவை குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஹான்ஸி குரோனியே மீது சமீபத்தில் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. அக்குற்றச்சாட்டை குரோனியேவும் ஒப்புக் கொண்டார். அவரைத் தொடர்ந்து மேலும் பல கிரிக்கெட் வீரர்கள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுவருகின்றன.
இந் நிலையில், கிரிக்கெட் மீதும் வீரர்கள் மீதும் கூறப்படும் குற்றச்சாட்டுகளால் கிரிக்கெட் விளையாட்டின் மதிப்பு குறைந்துவிடாமல் தடுக்கமேற்கொள்ளவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி விவாதிப்பதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இக் கூட்டத்துக்குத் தலைமை தாங்க வேண்டிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜக்மோகன் டால்மியாவின் தாயார் இறந்துவிட்டதை அடுத்து இக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.
இந்த அவசர மற்றும் முக்கிய கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. லஞ்சம் வாங்கியதைவீரர்கள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது குறித்தும் அல்லது அபராதம் அல்லது நிரந்தரமாக கிரிக்கெட் போட்டியில்பங்குகொள்ள தடை விதிப்பது குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
இக் கூட்டத்தில், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகள் தவிர கவுன்சிலில் உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியதலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது மனோஜ் பிரபாகர் கூறிய குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்திய நீதிபதி சந்திரசூடின் அறிக்கை, பாகிஸ்தான்கிரிக்கெட் வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளைப் பற்றிய விசாரணை அறிக்கை, குரோனியே மீதான குற்றச்சாட்டு போன்றவை பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications