தமிழகத்தில் இன்று
கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காத 450 போலீஸார் மீது நடவடிக்கை: கருணாநிதி
சென்னை:
தமிழகத்தில் கள்ளச் சாராய விற்பனையை தடுக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர், 5 சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 11 போலீார் தற்காலிக பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர். 450 போலீசார் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
சட்டசபையில் செவ்வாயன்று நடந்த கேள்வி நேர விவாதத்தில் தமிழ்மாநில தேசிய லீக் உறுப்பினர் அப்துல்நாசர், கள்ளச் சாராய விற்பனை தொடர்பாககேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் பதிலளித்தார்.
முதல்வர் பதிலுரை வருமாறு:
கள்ளச் சாராய விற்பனை, காய்ச்சுதல் மற்றும் அதற்கு முதலீடு செய்பவர்களை தண்டிக்க, மதுவிலக்குச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு குறைந்தபட்சம் 3 மாதம் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கப்படும்.
கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கள்ளச் சாராய விற்பனைக்குமுதலீடு செய்பவர்களுக்கு 3 மாத சிறைத் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
கள்ளச் சாராயத்தை ஒழிக்க காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டத்தையும் கடுமையாக்கி அவர்களுக்கு தண்டனைவழங்கப்படுகிறது. இருப்பினும் அதை ஒழிக்க முடியவில்லை. எல்லா தரப்பிலும் பக்குவம் ஏற்பட்டால் தான் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியும்.
கள்ளச் சாராயத்தை ஒழிக்கத் தவறிய காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை ஒரு இன்ஸ்பெக்டர், 5 சப் இன்ஸ்பெக்டர், ஒருதலைமைக் காவலர், 4 காவலர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். 102 இன்ஸ்பெக்டர்கள், 140 சப் இன்ஸ்பெக்டர்கள், 77 தலைமைக் காவலர்கள், 131காவலர்கள் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் முதல்வர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications