தமிழகத்தில் இன்று
தமிழக மக்கள் தொகை 2001-ல் 6 கோடியை எட்டும்
சென்னை:
தமிழ் நாட்டின் மொத்த மக்கள் தொகை 2001ல் 6 காடியே 20 லட்சத்தை எட்டலாம் என்று தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர்சந்திரமவுலி தெரிவித்தார்.
1991ம் ஆண்டில் நடந்த கணக்கெடுப்பில் தமிழக மக்கள் தொகை 5 கோடியே 60 லட்சமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
சந்திரமவுலி மேலும் கூறியதாவது:
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு இரு கட்டங்களில் நடைபெற உள்ளது. முதலாவதாக வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பும், அதைத் தொடர்ந்து மக்கள்தெ ாகை கணக்கெடுப்பும் நடைபெறும்.
தமிழ்நாட்டில் இவ்வாண்டு மே 1 முதல் 31 வரை வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு நடைபெறும். ஒவ்வொரு மாநிலம் வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பைஏப்ரல் முதல் ஜூன் வரையில் தங்களுக்கேற்ற மாதத்தில் நடத்துகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2001 பிப்ரவரி 9 முதல் 28 வரை நடைபெறும். இது நாடு முழுவதும் ஒரே சமயத்தில் நடைபெறும் கணக்கெடுப்புஎன்பதால், ஒரு லட்சம் கணக்கெடுப்பாளர்களும், 20 ஆயிரம் மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்படுவார்கள்.
மக்கள் தொகை புள்ளி விவரங்களுக்கு அடிப்படை ஆதாரம், பொருளாதார திட்டங்களை உருவாக்க உதவுவது, வளர்ச்சி மற்றும் நிலத் திட்டங்களைநடைறைப்படுத்த உதவுவது, பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தீர்மானிப்பதற்கும், தொகுதிகளை பிரிப்பதற்கும்உதவுவது ஆகியவை கணக்கெடுப்பின் முக்கிய நோக்கமாகும்.
வீட்டுப் பட்டியல் படிவத்தில் மூன்று பெரிய தலைப்புகளின் கீழ் விபரங்கள் சேகரிக்கப்படும். சென்சஸ் ஆவணங்கள், பதிவேடுகள் அல்லது படிவங்கள்முதலானவை எந்த ஒரு நபராலும் ஆய்வு செய்யப்படவோ அல்லது நீதித்துறை வழக்குகளுக்கு சாட்சியாக அளிக்கவோ அனுமதிக்கப்பட மாட்டாது.
வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு முடிவடைந்தவுடன் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் அலுவலகம் கொண்டுவரப்படும். இந்த விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்படும் என்றார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications