மேட்ச் ஃபிக்ஸிங்: புகார் நிரூபனமானால் வாழ்நாள் தடை - சர்வதேச கிரிக்கெட்கவுன்சில் முடிவு
லண்டனில் முதன்முதறையாக சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா ஜூன் 24 ம் தேதி நடக்கிறது.இதில் தாள் பட இசையமைப்பாளர் ஏ.ஆ.ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இதுகுறித்து சர்வதேச இந்திய திரைப்பட விருதுக் கமிட்டி தலைவரும், பிரபல நடிகருமானஅமிதாப்பச்சன் நிருபர்களிடம் பேசுகையில், இந்த மில்லினியம் ஆண்டில் முதன்முதலாக இந்த விருது வழங்கும்நிகழ்ச்சி லண்டனில் நடைபெறுகிறது. ஆஸ்கர் விருதுக்குச் சமமாகக் கருதப்படும் இந்த விருது இந்தியத்திரைப்படத்துறையைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
சர்வதேச அளவில் இந்தியாவில் மட்டுமே அதிக அளவில் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்தியத் திரைப்படங்களின் ஆண்டு வருமானம் சர்வதேச அளவில் 200 மில்லியனாக ( அமெரிக்க டாலர் மதிப்பு)உள்ளது. 800 க்கும் மேற்பட்ட இந்தியத் திரைப்படங்கள் வருடந்தோறும் இந்தியாவிலிருந்து மட்டும்தயாரிக்கப்படுகின்றன.
இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனமானக விஸ்கிராஃப்ட் இந்த நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. விருதுவழங்கும் விழா மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படும். ஹாலிவுட் மற்றும் மும்பை திரைப்படப் பிரமுகர்கள்பலர் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள்.
ரஹ்மான் பெயர் பரிந்துரை: தாள் படத்திற்கு இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கவிஞர்ஆனந்த் பக்ஷி, ஹம் தில் சே சோகி சனம் படத்திற்காக மெகபூப், ஃபயர் படத்தில் வில்லன் நடிகராக நடித்த ராஜ்பப்பார் ஆகியோர் உள்பட பலர் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.