தமிழகத்தில் இன்று
கூட்டுறவு வங்கியில் உபரி நிதி: தமிழக அரசு புதிய திட்டம்
சென்னை:
கூட்டுறவு வங்கிகளில் உள்ள உபரி நிதியை ரிசர்வ் வங்கி ஒப்புதலுடன் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்தது.
சட்டசபையில் புதன்கிழமை நடைபெற்ற உணவு மற்றும் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கையில் அமைச்சர்கே.என்.நேரு இதைத் தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் கூறியதாவது: கூட்டுறவு நிதிநிறுவனங்களில் காலியாக உள்ள பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். கூட்டுறவு வங்கிகளில்உபரியாக உள்ள நிதியை ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுடன் நிதிநிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்படும்.
கிராம அளவில் தேவை அடிப்படையில் புதிய வேளாண் கூட்டுறவு வங்கிகள் துவங்கப்படும். இவ்வாண்டில் மேலும் 200 தொடக்க கூட்டுறவு வேளாண்வங்கிகளுக்கு கட்டடம் கட்டித்தரப்படும்.
பெரம்பலூர், திருவள்ளூர், தேனி மாவட்டங்களில் புதிய மத்திய கூட்டுறவு வங்கிகள் துவங்கப்படும். மகளிர் சிறுவணிகக் கடன்திட்டம், கிராமபகுதிஅளவில் விரிவுபடுத்தப்படும். இவ்வாண்டில் புதிய வேளாண் தேசிய காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும்.
ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஊதிய உயர்வு திருத்தியமைக்கப்படும். மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். தமிழ்நாடுகூட்டுறவு ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் மூன்று கூட்டுறவு மேலாண்மை பாடத்திட்டத்தில் கம்ப்யூட்டர் கல்வி சேர்க்கப்படும். மொத்த விற்பனைபண்டகசாலை மூலம் பெட்ரோல் பங்க் நடத்த அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் நேரு அறிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications