தமிழகத்தில் இன்று
பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யும் விஷயத்தில் தேர்தல் கமிஷன் சமீபத்தில் கூறிய யோசனையை, பல அரசியல்கட்சிகளும் நிராகரித்துவிட்டன. எந்த வித சிக்கலும் இல்லாமல் பிரச்னையை எளிதாகத் தீர்க்க தேர்தல் கமிஷனின் யோசனை உதவி இருக்கும்.
ஆனாலும் கூட இது நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. ஏனென்றால் இந்தப் பெண்கள் இட ஒதுக்கீடு சமாச்சாரம் நல்லதே அல்ல என்பது எல்லாக்கட்சிகளுக்கும் புரிந்துதான் இருக்கிறது. ஆகையால் இது நிறைவேறி விடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பல கட்சியினருக்கும் வந்தாகிவிட்டது.
ஆனால் இந்த விஷயத்தில் எதிர்ப்பு தெரிவித்தால், அது பழைமைவாதமாகப் போய்விடும்.பெண்கள் முன்னேற்றத்தைத் தடுப்பவர்கள் என்ற பெயரைவாங்கித்தந்துவிடும். இவற்றையெல்லாமாவது சகித்துக் கொள்ளலாம்.
ஆனால் சனாதனவாதிகள்என்ற முத்திரை விழுந்து விடுமே? அதை எப்படிப் பொறுப்பது? ஆகையால் எதிர்க்கவும் முடியவில்லை; அதே சமயத்தில்ஏற்கவும் மனமில்லை. இப்படியாகத்தானே, பெண்கள் இட ஒதுக்கீடு என்ற பூதத்தை வெளியே உலாவவிட்டு விட்ட அரசியல் கட்சிகள் எல்லாம்,இப்போது அந்த பூதத்திடமிருந்து தப்பிப்பதற்காக படுகிற அவஸ்தை படு தமாஷாக இருக்கிறது.
பெண்கள் எல்லாம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கிடப்பது போல, ஒரு பிரச்சாரத்தைக் கிளப்பி விட்டு, அந்த அடிமைச் சங்கிலிகளை அறுத்தெரிந்து பெண்விடுதலை உதயமாவதற்கு வழி செய்வதாகச் சொல்லிக் கொண்டு புறப்பட்ட கட்சிகள் -இப்போது அந்த விடுதலையிடமிருந்து விடுதலை பெறுவது எப்படிஎன்று தெரியாமல் விழிக்கின்றன.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், பா.ஜ.க.கூட்டணியினர் ஆகியோர் ஓட்டளித்தாலே எந்த மசோதவையும் நிறைவேற்றலாம்; எந்த திருத்தத்தையும் செய்யலாம்.
இக்கட்சிகளுக்கு இரு சபைகளிலும் போதுமான பலம் இருக்கிறது. இந்த உண்மை பெண் விடுதலைப் போராட்ட கட்சிகளான பா.ஜ.க.வையும்காங்கிஸையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. பார்த்தார்கள்.மெஜாரிட்டி பலம் எல்லாம் போதாது; எல்லாரும் ஒப்புக் கொள்ள வேண்டும்;
ஒருமித்த கருத்து உருவாக்குவோம்என்று போட்டார்கள் ஒரு போடுமுடியவே முடியாதுஎன்று முலாயம் சிங்கும்,சரிப்பட்டு வராது என்று லாலு பிரசாத்யாதவும் கூறியதால், ஒருமித்த கருத்து என்பது நடக்காத காரியம் என்று நம்பி, அந்த சாக்கை விடாப்பிடியாக பெண் விடுதலைப் போராட்ட கட்சிகள்பிடித்துக் கொண்டன.
இந்த பேத்து மாத்து வேலையில் முன்னணியில் நிற்பது பா.ஜ.க. தான். ஏதோ எல்லா விஷயங்களிலுமே ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் தீர்மானங்கள்செய்யப்படுவது போல, ஒருமித்த கருத்து என்ற பாவனை மேற்கொள்ளப்பட்டது. முலாயம் சிங் யாதவ் போன்றவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்என்ற நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்பட்ட பிரகடனம் இது.
இந்த நிலையில் தான் தேர்தல் கமிஷன் அரசியல் சட்ட திருத்தம் போன்ற சிக்கல் நிறைந்த விஷயங்கள் தேவையே இல்லை;எல்லா கட்சிகளும் குறிப்பிட்டசதவிகித இடங்களில் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். அப்படி செய்யாத கட்சிகள் அங்கீகாரம் பெறாது - என்ற திருத்தத்தை மக்கள்பிரதிநிதித்துவ சட்டத்தில் செய்தாலே போதும்; இது சுலபமாகச் செய்து விடக்கூடிய காரியம்.
இதற்கு மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி எல்லாம் தேவையே இல்லை. ஆகையால் அரசியல் கட்சிகள் அரசியல் சட்ட திருத்தம், அது, இது, என்றயோசனைகளை விட்டு, இந்த மக்கள் பிரதிநிதித்துவ சட்ட திருத்தத்தைச் செய்தாலே போதும்என்று யோசனை கூறியது.
உண்மையாகவே பெண்கள் இட ஒதுக்கீடு விஷயத்தில் ஒரு சில படிகள் உடனடியாக முன்னேற வேண்டும் என்ற விருப்பம் இருந்திருக்குமேயானால், எல்லாஅரசியல் கட்சிகளும் இந்த யோசனையை தயக்கமில்லாமல் ஏற்றிருக்கும்.
ஏனென்றால், இந்த யோசனையை நிறைவேற்றுவது எளிதான காரியம். எந்தெந்த தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்குவது - அந்த மாதிரிஒதுக்கப்பட்ட தொகுதிகள் ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றப்பட வேண்டுமா அல்லது அப்படியே தொடர வேண்டுமா - சுழற்சி முறையில்பெண்களுக்கான தொகுதிகள் நிர்ணயிக்கப்பட்டால், ஒரு முறை அந்தந்த தொகுதிகள் நிர்ணயிக்கப்பட்டால், ஒரு முறை அந்தத் தொகுதிகளில் நின்று வெற்றிபெற்ற பெண்களால், மறுமுறை வெற்றி பெற முடியுமா...என்பது போன்ற கேள்விகளுக்குக்கெல்லாம் இடமே இல்லாமல், ஒரு குழப்பமின்றி,தெளிவாக செயல்படுத்தப்படக்கூடிய தேர்தல் கமிஷனின் யோசனை அரசியல் கட்சிகளை பயமுறுத்தி விட்டது.
ஐயைய்யோ...! நிஜமாகவே இட ஓதுக்கீடு வருவதற்கு சுலபமான வழியை தேர்தல் கமிஷன் காட்டி விட்டதே! இந்த வழியை ஏற்று விட்டால்,பெண்கள் இட ஒதுக்கீடு என்பது செயல் படுத்தப்பட்டு விடுமே! பிரச்னை தீராமல் இருக்க நாம் பட்ட பாடு அனைத்தும் வீணாகி விடுமே! என்றகவலை பல கட்சிகளையும் வாட்ட, அவை எல்லாம் ஒன்று சேர்ந்து, தேர்தல் கமிஷனின் யோசனையை நிராகரித்தன.
இதில் கிட்டத்தட்ட ஒருமித்த கருத்து உருவாகி விட்டது! தீராத பிரச்சனையாகவே இதை வைத்திருப்பது என்ற ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஒருமித்த கருத்தைஉருவாக்கி, இதை அமல் செய்வோம்என்று பா.ஜ.க.வும், மற்ற கட்சிகளும் கூறிவிட்டன.
இந்த தர்ம சங்கடத்திற்கெல்லாம் அடிப்படை காரணம் நேர்மையின்மை. இந்த யோசனை ஏற்கத்தகாதது என்று பெண்கள் இட ஒதுக்கீடு பிரச்னைபற்றி கருத்து தெரிவிக்க முதலியே இவர்களுக்குத் துணிவு இருந்திருந்தால், இப்படிப்பட்ட குழப்பங்களுக்கெல்லாம் இடமே இல்லாமற் போயிருக்கும்.
அந்த நேர்மைத் துணிவை இப்போதாவது பா.ஜ.க.வும், காங்கிரஸும் பெற்றாலே போதுமானது. காங்கிரஸ் ஒத்துழைக்காவிட்டால் கூட,பா.ஜ.க.அந்த நிலையை எடுப்பதால் எந்த ஒரு அரசியல் நஷ்டமும் அதற்கு ஏற்பட்டு விடாது. பெண்கள் இட ஒதுக்கீடு என்பது பல நடைமுறைபிரச்னைகளைத் தோற்றுவிக்கும்; எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது, அவற்றை சுழற்சி முறையில் ஒதுக்குவதா அல்லது நிரந்தரமாகவேஒதுக்குவதா - என்ற கேள்விகள் எல்லாம் எழுகின்றன.
தவிர, தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியவர்களுக்காக இதில் உள் ஒதுக்கீடு செய்ய வேண்டுமா என்ற பிரச்சனையும்முளைத்திருக்கிறது. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு இப்போதைக்கு இந்தபெண்கள் இட ஒதுக்கீடுவிஷயத்தை நாங்கள் ஒதுக்கிவைக்கிறோம்என்று பா.ஜ.க. கூறினால், பெயருக்காக சில கட்சிகள் அதை எதிர்க்கலாமே தவிர, எல்லாக் கட்சிகளுமே நிம்மதிபெருமூச்சுதான் விடும்.
இப்போதைய தேவை - பெண்களுக்கான இட ஒதுக்கீடு அல்ல; நேர்மைக்கான ஒதுக்கீடுதான் உடனடித்தேவை. மூன்றில் ஒரு பங்கு கூட வேண்டாம்.நேர்மைக்காக பத்தில் ஒரு பங்கு இடம் ஒதுக்கினால் கூட போதும், உணராதவர்கள் ஒன்று கூடி, இம்மாதிரி உதவாத பிரச்னைகளை உருவாக்காமல்இருக்க, இது ஒன்றுதான் வழி.












Click it and Unblock the Notifications