தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
சிறந்த தமிழக டாக்டர்களுக்கு அண்ணா விருது

சென்னை:

சிறப்பாக செயல்படும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு(நர்ஸ்) அண்ணா விருது வழங்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை சட்டசபையில் வியாழனன்று மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்டார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் கண் ஒளி இழப்பு தடுப்புத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டதன் விளைவாக, ஆயிரத்திற்கு 14 பேர் என்றிரு ந்தகண் ஒளி இழப்பு நோயால்பாதிப்பு என்றிருந்த நிலை மாறி,தற்போது ஆயிரத்திற்கு 3 பேர் என்று குறைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் உலக வஙகி 64கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளது. அதை கொண்டு மாவட்டத்தலைநகரங்களில் கண் மருத்துவமனை தனியாக துவங்கப்படும்.எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்,மருந்துகள் வாங்க ஒருகுறிப்பிட்ட தொகைஅரசு ஒதுக்கியுள்ளது.

அப்பணத்தை கொண்டு தேவைப்படும் மருந்துகளை வெளியில்வாங்கலாம். அப்படி வாங்க மறுக்கும் மருத்துவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர் மருத்துவ பரிசோதனைத் திட்டத்தில் இதுவரை 25லட்சம் மாணவர்கள் பயன் பெறறுள்ளனர். வருமுன் காப்போம்திட்டத்தில் 23 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

இவர்களுக்கு ஒரு கோடியே 5 லட்சம் செலவில் மருந்துகள்வழங்கப்பட்டுள்ளன.இவர்களின் மேல் சிகிச்சைக்காக ஒருகோடியே 48 லட்சத்து 841 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

மத்திய அரசு 100 கோடி ரூபாய் செலவில் 100 ஏக்கர்பரப்பளவில் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாகஇது அமைக்கப்படுகிறது. அநேகமாக மதுரை அருகில்அமைக்கப் படும் என்று சட்டசபையில் அமைச்சர் ஆற்காடுவீராசாமி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+