தமிழகத்தில் இன்று
சேடப்பட்டி முத்தையா ஏன் திமுகவில் சேரவில்லை?
சென்னை:
அதிமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சேடப்பட்டி முத்தையா திமுகவில் சேரவில்லை.
அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரகுபதி, கருப்பசாமிபாண்டியன் ஆகியோர் திமுகவில் புதன்கிழமை இணைந்துள்ளனர். அவர்கள் திமுகவில் இணைந்துள்ள நிலையில்சேடப்பட்டி முத்தையா மட்டும் ஏன் திமுகவில் சேரவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த மாதம் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தங்களது கட்சியின் மூத்த தலைவர்களான சேடப்பட்டி முத்தையா, ரகுபதி, கருப்பசாமிபாண்டியன்ஆகியோரை காரணமின்றி அக்கட்சியிலிருந்து நீக்கினார்.
அவர்கள் மூன்று பேரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டனர். இந்த நிலையில் மூன்று பேரும் ஜெயலலிதாவை தாக்கிமாறி மாறி அறிக்கைகள் விட்டு வந்தனர்.
எம்.ஜி.ஆர். அதிமுக பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மூவரும் தங்கள் கட்சியில் இணைய வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்திருந்தார். தனக்கு ஜெயலலிதாதான் எதிரியே தவிர அதிமுகவில் உள்ள யாரும் தனக்கு எதிரியல்ல என்றும் கூறினார்.
இந்த நிலையில் ரகுபதியும், கருப்பசாமிபாண்டியனும் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து தாங்கள் திமுக வில் இணைய விரும்புவதாகத் தெரிவித்தனர். கருணாநிதியும்இதை ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து 5000 தொண்டர்களுடன் இவர்கள் இருவரும் புதன்கிழமை திமுகவில் இணைந்தனர்.
சேடப்பட்டி ஏன் சேரவில்லை?
ஆனால் நீக்கப்பட்ட மூன்று பேர்களில் சேடப்பட்டி முத்தையா மட்டும் திமுக வில் இணையவில்லை. அவர் மட்டும் ஏன் திமுகவில் சேரவில்லை என்றுகேள்வி எழுந்துள்ளது.
அவர் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டு உள்ளது. ஊழல் குற்றச்சாட்டு உள்ள நிலையில்அவரை திமுகவில் சேர்ப்பது தர்மசங்கடத்தை தரும் என்பதால் அவரை திமுக அனுமதிக்கவில்லை எனத் தெரிகிறது.
மேலும் சேடப்பட்டி முத்தையா திமுகவில் இணைந்தால் மதுரையில் முதல்வரின் மகன் மு.க.அழகிரியின் அரசியல் நடவடிக்கைகளுக்கு போட்டிஏற்படலாம் எனவும் திமுக நினைத்திருக்கலாம்.
ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட சேடப்பட்டி முத்தையா திமுகவில் இணைந்தால் அவரால் திமுகவிற்கு கெட்ட பெயர் ஏற்படுவதுடன் அவரைஅக்குற்றச்சாட்டுக்களிலிருந்து மீட்கவும் திமுக உதவ வேண்டிய சுமை திமுக மேல் விழுந்து விடும். அதிமுக ஆட்சியின் ஊழல் குறித்து தனி நீதிமன்றம்அமைத்து விசாரித்து வரும் திமுக அரசுக்கு இது பெரும் பிரச்சனையாகிவிடும்.
இதனால் இது போன்ற எந்த ஊழல் குற்றச்சாட்டு ஏதும் இல்லாத ரகுபதி, கருப்பசாமிபாண்டியனை திமுக தன் பக்கம் சேர்த்துக் கொண்டதாகத்தெரிகிறது.












Click it and Unblock the Notifications