தமிழகத்தில் இன்று
ரயில் பயணிகளின் தாகம் தீர்க்கும் ராஜுபாய்
மும்பை:
நாட்டில் வறட்சி பாதித்த பகுதிகளுக்கு ரயில்கள் தண்ணீர் கொண்டு செல்கிறதோஇல்லையோ, ரயிலில் பயணம் செய்யும் ஒருவர் ரயில் பயணிகளின் தாகம் தீர்க்கதண்ணீர் விநியோகிக்கிறார். இலவசமாக, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இச்சேவையை அவர் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
58 வயதான அந் நபருடைய பெயர் ராஜ்குமார் சாகர்மல் சின்ஹானியா. ஆனால்,அவரை ராஜுபாய் என்றுதான் ரயில் பயணிகள் அழைக்கின்றனர். மும்பை,தாகுர்லியைச் சேர்ந்த இவர், ஒரு நிறுவனத்தின் அக்கவுண்டன்டாகப் பணியாற்றிவருகிறார்.
தினமும் காலையில் தாகுர்லி ரயில் நிலையத்தில் பணிக்குச் செல்லும் அவர் தன்னுடன்சுமார் 150 பாட்டில்களல் குளிர்ந்த நீரையும் எடுத்துச் செல்கிறார். பாட்டில்களுடன்ரயிலின் ஒவ்வொரு கம்பார்மெண்டுக்கும் செல்கிறார். தாகத்தால் தவிக்கும்பயணிகளுக்கு இலவசமாக தண்ணீர் கொடுக்கிறார்.
மாலையில் வீடு திரும்பும்போதும் இச் சேவையை அவர் தொடர்கிறார். கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக இப் பணியை அவர் ஆற்றி வருகிறார். தாகத்தால்தவிப்பவர்களுக்குத் தண்ணீர் கொடுத்தால், அது கடவுளுக்குச் செய்யும் சேவையாகக்கருதுகிறேன் என்கிறார் ராஜுபாய்.
மிகவும் கூச்ச சுபாவம் உடைய ராஜுபாய்க்கு மனைவியும், 11 வயது மகளும்உள்ளனர். ராஜுபாயின் சேவைக்கு இவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கணவரின்சேவைக்கு ஏற்ப வீட்டில் உள்ள பிரிட்ஜில் தண்ணர் பாட்டில்களை நிரப்பி வைப்பதுஅவர்களது பணியாகும்.
தண்ணீர் மட்டுமல்ல தன்னுடன் அத்தியாவசிய மருந்துகள், பாக்கு போன்றவற்றையும்ராஜுபாய் எடுத்துச் செல்கிறார். அவற்றுக்கும் அவர் காசு வாங்குவதில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications