தமிழகத்தில் இன்று
சென்னை:
வன்னியர்களின் உரிமைகளை வலியுறுத்தி ஜூன் மாதம் கோரிக்கை மாநாடு நடத்தப்படும் என்று தமிழகவன்னியர் சங்கம் அறிவித்துள்ளது.
வன்னியர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் ஏ.கே.நடராஜன் தலைமையில் சென்னையில்நடைபெற்றது. இக்கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு தொழில் உதவிகளை மத்திய அரசு உதவியுடன் தமிழகஅரசு செய்து வருகிறது.
இதேபோல் வட மாவட்டங்களிலும் செயல்படுத்த தவறியது, வட மாவட்ட மக்களை வஞ்சித்தது போல் ஆகும்என்று இச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டில்லியில் சமூக நீதி மாநாடு நடத்திய டாக்டர் ராமதாஸ், மத்திய அரசில் வன்னியர்களுக்குரிய 2 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுத் தர முயற்சி மேற்கொள்வாரா என்றும் இச்சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் இச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications