தமிழகத்தில் இன்று
மணிலா:
ஐ லவ் யூ வைரஸை உருவாக்கி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் அடையாளம் தெரிந்தது. சுமார் 23 வயதான அவர் மணிலாவை சேர்ந்தவர்என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அரஸ்ட் வாரன்ட் பிறப்பிப்பதற்காக போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.
இதுகுறித்துக் கூறப்படுவதாவது:
கடந்த வாரம் ஈ மெயில் மூலம் ஐ லவ் யூ என்ற வைரஸ் அனுப்பப்பட்டது. அந்த ஈ மெயில் கடிதத்தைப் பிரித்துப் பார்த்தவர்களின் கம்யூட்டர்கள் எல்லாம்செயலிழந்தது.
பில் கிளின்டன் வசிக்கும் வெள்ளை மாளிகை உள்பட அமெரிக்கா, சிங்கப்பூர், ரஷ்யா, பிலிப்பைன்ஸ் உள்பட உலக நாடுகளில் பல லட்சக்கணக்காணகம்ப்யூட்டர்கள் இந்த வைரசினால் பாதிக்கப்பட்டன.
பல்லாயிரம் கோடி டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிலிப்பைன்ஸ் தேசிய புலனாய்வுத்துறைப் போலீசார் இந்தக் கம்யூட்டர் வைரசைஏவிவிட்டவர் யார் என்று தீவிரமாய்த் தேடி வந்தனர்.
அப்போது மணிலாவிலிருந்துதான் இந்த ஐ லவ் யூ வைரஸ் பரப்பி விடப்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. வைரசை பரப்பியவர் சுமார் 23வயதிற்குட்பட்டவர் என்றும் தெரிய வந்தது. மேலும் அவர் மணிலாவைச் சேர்ந்த அவர் அடிக்கடி தான் இருக்கும் இடத்தை மாற்றிக்கொண்டேயிருப்பவர்என்றும் தெரிய வந்தது.
ஆனால் அவரை மட்டும் பிடித்தால் போதாது. அவர் இந்த வைரஸை பரப்பி விடுவதற்கு உபயோகித்த கம்யூட்டர்கள் மற்றும் இதர சாதனங்களையும்கண்டுபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர்கள் ஸ்தம்பிப்பதற்குக் காரணமாக இருந்த குற்றவாளியை விரைவில் கண்டுபிடிப்போம். அவரைக் கண்டுபிடித்ததும் கைது செய்வதற்கு ஏற்றவகையில் அரஸ்ட் வாரன்டும் நாங்கள் தயாராக வைத்திருக்கிறோம் என்று பிலிப்பைன்ஸ் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பி.டி.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications