தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இந்திய விமானப் படைத் தலைவருடன்இலங்கை அதிபர் ஆலோசனை
கொழும்பு:
இலங்கை சென்றுள்ள இந்திய விமானப் படைத் தலைவர் ஏ.ஒய். டிப்னிஸ் அந் நாட்டு அதிபர் சந்திரிகா குமாரதுங்காவைசந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது இலங்கையின் பாதுகாப்பு குறித்து அவர்கள் ஆலோசித்தாக தெரிகிறது. விமானப் படைத் தலைவருடன்இலங்கைக்கான இந்தியத் தூதர் சிவசங்கர் மேனனும் உடனிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விமானப் படை விமானத்தில் தனது மனைவியுடன் டிபினிஸ் இலங்கை வந்தார். திங்கள்கிழமைஇலங்கை விமானப் படை தலைமையகத்தில் வீரர்களின் அணி வகுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் பாதுகாப்புத்துறை துணைஅமைச்சர் அணிருத்த ரத்வத்தே, ராணுவத் தலைவர் சிரிலல் வீரசூர்யா ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.












Click it and Unblock the Notifications