தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இலங்கை பிரச்சனை: இந்தியாவுடன் நார்வே தூதர் ஆலோசனை
டெல்லி:
இந்தியாவின் உதவியின்றி இலங்கை பிரச்சனைக்கு அமைதித் தீர்வு காண முடியாது என நார்வே கூறியுள்ளது.
இந்தப் பிரச்சனைக்கு அமைதித் தீர்வு காணும் முயற்சியாக நார்வே நாட்டு அமைதித் தூதர் எரிக் சோல்ஹெய்ம்வியாழக்கிழமை இந்தியா வந்தார். மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகளில் நார்வேஈடுபட்டுள்ளது.
இந் நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் துணைக் கண்டத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்புரீதியிலானபிரச்சனைகள் குறித்து இந்தியா பல்வேறு நாடுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. குறிப்பாகஅமெரிக்காவுடன் இந்திய அதிகாரிகள் இந்தப் பிரச்சனை குறித்து பேசினர்.












Click it and Unblock the Notifications