தமிழகத்தில் இன்று
சென்னை:
சென்னை கோட்டை முன் (சட்டமன்றம்) போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி கிடையாது என முதல்வர்கருணாநிதி கூறினார்.
அவ்வாறு அனுமதித்தால் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து விடுவார்கள். அப்படி ஏதாவது அசம்பாவிதம்ஏற்பட்டால் அதற்கு எதிர் கட்சிகளை பொறுப்பு ஏற்க செய்ய முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்த ஆளும் கட்சியினருக்கு கூட அனுமதி மறுக்க்ப்பட்டுள்ளதுஎன்றும் அவர் தெரிவித்தார்.
சட்டசபையில் வெள்ளிக்கிழமை காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஹேமச்சந்திரன் பேசினார். அவருக்கும் முதல்வருக்கும்இடையில் நடந்த விவாதம் வருமாறு:
ஹேமச்சந்திரன்:
ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுக்கின்றனர். ஒரு இடத்தில் உண்ணா விரதம் நடத்தஅனுமதி கேட்டால், இன்னொரு இடத்திற்கு போலீசார் அனுமதி தருகின்றனர்.
இல்லையென்றால் ஒரு வாரத்திற்கு பின்னர், உங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று என்றைக்குபோராட்டமோ அதற்கு முன் தினம் இரவு தகவல் தருகின்றனர்.
திருவல்லிக்கேணியில் அனுமதி கேட்டால், அரும்பாக்கத்திற்கு தருகின்றனர். எந்த இடத்தில் போராட்டம் நடத்தவேண்டும் என்ற உரிமையை போலீசார் எடுத்துக் கொள்வது ஏன்?
அமைச்சர் ஆற்காடு வீராசாமி:
அரும்பாக்கம் ஒன்றும் போராட்டம் நடத்த அருகதை அற்ற இடமல்ல.
ஹேமச்சந்திரன்:
பிரச்னை அதுவல்ல. எந்த இடத்தில் போராட்டம் நடத்த வேண்டும் என்பதை போலீசார் எப்படி தீர்மானிக்கமுடியும்.அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. கோட்டை முன்பு போராட்டம் நடத்த அனுமதி கேட்டால்அண்ணாநகரில் நடத்துங்கள் என்கிறார்கள்.
முதல்வர்:
கோட்டை முன்பு போராட்டம் நடத்த அனுமதி கேட்டால், அதற்கு கொஞ்சம் தூரத்தில் உள்ள ரிசர்வ் வங்கிஅருகிலோ அல்லது அரசு விருந்தினர் மாளிகை அருகிலோ அனுமதி தரப்படும்.
கோட்டை முன்பே போராட்டம் நடத்த அனுமதி அளித்தால் , உங்களைப் போன்ற நல்ல தலைவர்களையும் மீறிசமூக விரோதிகள் உள்ளே நுழைந்து விடுவார்கள். அதன் காரணமாக அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும். அப்படிஅசம்பாவிதம் ஏற்பட்டால் நீங்கள் பொறுப்பேற்க முடியாது.
உங்களைப் பொறப்பேற்க வேண்டும் என்று நாங்களும் கூற முடியாது. அதனால் தான் அனுமதி மறுக்கப்படுகிறது.அதே போல் போக்குவரத்து நெரிசல் மிகுந்த அண்ணா சாலையில் அனுமதி மறுக்கப்படுகிறது. அண்ணா சாலையில்போராட்டம் நடத்த ஆளும் கட்சிக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications