தமிழகத்தில் இன்று
சென்னை:
வருமானத்துக்கு மீறிய சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு தொண்டைவலியும், சசிகலா அண்ணன் மனைவி இளவரசிக்கு நீரிழிவு நோயும் இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றுஅவர்களது வக்கீல் விளக்கம் அளித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்குஅதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்துக்கள் சேர்த்துள்ளதாக ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணை முதலாவது தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணைநடைபெறுகிறது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஒருவர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதிஆறுகபெருமாள் ஆதித்தன் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது யாரும் ஆஜராகவில்லை. ஆனால், சுதாகரன், இளவரசி சார்பில்ஆஜராகாததற்கு விளக்கம் அளித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், இளவரசிக்கு நீரிழிவு நோய் என்றும், சுதாகரனுக்கு தொண்டை வலி என்றும், அதன் காரணமாக நீதிமன்றம் வரஇயலவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
நாளைய விசாரணையில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications