செயலை விட அதன் பயனை நேசித்தால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தன் நாட்டு விடுதலைக்குப் போராடிய தலைவர்கள் விடுதலை விழாவில் முன்னிலை பெறுவார்கள். வெற்றியின்பயனாக விடுதலை அடைந்த நாட்டின் தலைமைப் பொறுப்பு தரப்படும். பல சமயங்களில் பெறப்படும்.

ஆனால் விடுதலைப் போருக்குத் தலைமை பெற்ற காந்தி அடிகள் விடுதலை நாட்டின் தலைமை ஏற்கவிரும்பவில்லை. கொடியேற்று விழாவின் கோலாகலங்களில் மாலைகளுக்குத் தோளைத் தயார் செய்துகொள்ளாமல் தேசத்தின் நிர்மாணப் பணிகளுக்கு மக்களைத் தயார் செய்ய நவகாளி நோக்கிப் புறப்பட்டார்

ஆதிசங்கரரும். ராமனுஜரும் பகவத் கீதைக்குப் பலவித உரை எழுதி மகிழ்ந்தனர்.

ஆனால் எலும்பாலும் சதையாலும் பாரதமாதா பகவத்கீதைக்கு எழுதிய உரைதான் மகாத்மா காந்தி.!

ஆனால் இன்று இந்தியாவில் நடப்பது என்ன?

செயலைப் பற்றிய அக்கறையைவிட செயலின் பயனாகிய பணம் சம்பாதித்தல் ஜாம் ஜாமென்று ஜகஜ் ஜோதியாகநடக்கிறது! செயலின் விளைவாகிய பணத்தின் மீதான அக்கறை செயலையே கொல்லுகிற அளவு போய்விட்டது!

நாடு தாங்குமா?

பத்து மணிக்கு ஓர் இடத்தில் இருந்து புறப்படவேண்டிய அரசாங்கப் பேருந்து ஓடாது. ஏன்? அடுத்த சிலநிமிடங்களில் அதே வழித்தடத்தில் ஓட வேன்டிய தனியார் பேருந்து முதலாளி அரசு ஊழியரைத் தக்கபடிகவனித்துக் கொண்டால் அரசு பஸ் ஓடாது.

ஊழியர் நேர்மையானவர் என்றால் நேரக் கண்காணிப்பாளர் கவனிக்கப்படுவார். அவர் மசியவில்லையா?மேலிடம் கவனிக்கப்படும். மேலிடம் வேலை வாங்குவதற்கு பதிலாக வேலை பார்க்காதே என்று ஊழியரைஎச்சரிக்கும்.

பணம்.. பணம்.. செயலின் பயனான பணம் முக்கியமானால் செயல்கள் செத்தொழியும்.

லாரிகள் சில வழியாகச் செல்லக்கூடாது என்று அறிவித்து அதைக் கண்காணிக்க டிராபிக் கான்ஸ்டபிள் அங்குநிறுத்தப்படுவார். லாரி களைத் தடுக்கும் செயல்மீது அக்கறையற்ற ஒரு கான்ஸ்டபிள் லாரி டிரைவர் கீழே எறியும்சில்லறை மீது ஆர்வம் கொண்டு காசு பொறுக்கி எடுப்பது நாட்டில் சகஜமாகி வருகிறது.

இந்தச் சீரழிவு ஏன்? செயலைவிட செயலின் பயனை விரும்புவதால் ஏற்படுகிறது.

நேர்மாறாக இன்றைக்கும் உழைக்க வேண்டிய அவசியமே இல்லாத பல முதியவர்கள் இந்திய வீடுகளில்மகிழ்ச்சியாக உழைப்பதைப் பார்க்கிறேன். உழைப்பது அவர்களுக்கு ஆனந்தம் தருகிறது. அவர்களால்தான்இந்தியா உயிர் வாழ்கிறது.

ஆனால் இன்னொரு பக்கம்...?

(தொடரும்...)

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற