தமிழகத்தில் இன்று
சென்னை:
முதல்வர் கருணாநிதியின் 77வது பிறந்தநாளை ஒட்டி சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதி 60 லட்ச ரூபாயிலிருந்து 77லட்சமாக உயர்த்தப்படும்என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதியாக ஆண்டு தோறும் 60லட்ச ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை பயன்படுத்திமக்கள் நலப் பணிகளை தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் செய்து கொள்ளலாம்.
சட்டமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் பணிகளுக்கு மட்டுமே இந்த நிதி செலவிடப்படும். எனவே தொகுதியில் மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்குஇந்த நிதி ஒதுக்கீடு திட்டம் பயனுள்ளதாக இருப்பதாக எம்.எல்.ஏ.க்கள் கருதுகின்றனர். அதனால் அந்த நிதியை ஆண்டு தோறும் உயர்த்தித்தரவேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
1996ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது இந்த நிதி 25 லட்சமாக தான் இருந்தது. பின்னர் ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு இப்போது 60 லட்சமாகஉள்ளது.
அதை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படுவது போல் ஒரு கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று சட்டசபையில் செவ்வாய்க் கிழமை பேசியஉறுப்பினர்கள் பலர் வலியுறுத்தினர்.
இதை ஏற்று பதிலுரையில் அமைச்சர் அன்பழகன் 77லட்சமாக உயர்த்துவதாக அறிவித்தார். ஜூன் 3ம் தேதி முதல்வரின் 77வது பிறந்தநாள் என்பதுகுறிப்பிடத் தக்கது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications