தமிழகத்தில் இன்று
2 முக்கிய இடங்களை பிடித்தனர் புலிகள்
கொழும்பு:
யாழ்பாண புறநகரில் உள்ள நாவற்குழி, தச்சன்தோப்பு ஆகிய பகுதிகள் தங்கள் வசம் வந்ததாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.
குருநகர் என்ற பகுதியில் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
விடுதலைப் புலிகளின் லண்டன் அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் நகர் நோக்கி விடுதலைப் புலிகள் தொடர்ந்து நிதானமாக முன்னேறி வருகின்றனர். குருநகர், பாசையூர் ஆகிய இடங்களில் இரு தரப்பினருக்கும்இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இரு இடங்களும் யாழ்பாண மாநகராட்சிக்குட்பட்ட புறநகர்ப் பகுதிகள் ஆகும்.
நாவற்குழி மற்றும் தச்சன்தோப்பு ஆகிய இடங்களில் நடந்த கடும் சண்டைக்குப் பிறகு அவை விடுதலைப் புலிகள் வசம் வந்தன. இங்கு இலங்கை ராணுவத்தின்தாக்குதலை, விடுதலைப் புலிகளின் கொரில்லாப் படையினர் சுலபமாகத் தகர்த்தனர். இருப்பினும் விடுதலைப் புலிகள் தரப்பில் பெரும் சேதம் ஏற்பட்டதாகத்தெரிகிறது. இப்பகுதி முழுவதும் தற்போது புலிகள் வசம் வந்துவிட்டது.
தற்போது கைத்தடி என்ற இடத்தை நோக்கி விடுதலைப் புலிகள் முன்னேறி வருகின்றனர். கைத்தடி சந்திப்பு என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் நோக்கிவிடுதலைப் புலிகள் சென்று கொண்டுள்ளனர். இந்த இடத்தையும் அவர்கள் பிடிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மேல் தங்களது தாக்குதலை விடுதலைப் புலிகள் தொடங்கினர். மூன்று நாட்களாக நீடித்து வந்த தாற்காலிகஅமைதி இதன் மூலம் முடிவுக்கு வந்தது.
யாழ் பகுதியில் கடும் சண்டை நீடித்து வருவதால் அப்பகுதியில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பான இடங்கள் நோக்கி இடம் பெயர்ந்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications