2001-ல் டெல்லியில் ஆப்பிரிக்க-ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
புது தில்லி:
முதல் ஆப்பிரிக்க-ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தியத் தலைநகர் புது தில்லியில் 2001-ம் ஆண்டு நவம்பர்மாதம் நடைபெற உள்ளது.
செவ்வாய்க்கிழமை கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது என்று அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
முதல்முறையாக நடைபெற உள்ள இப் போட்டியில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களைச் சேர்ந்த 96 நாடுகள்பங்குகொள்ளும். அதலெடிக்ஸ், குத்துச் சண்டை, நீச்சல், கால்பந்து, டென்னஸ், துப்பாக்கிச் சுடுதல் ஆகிய 6பிரிவுகளில் 10 நாட்களுக்கு இப் போட்டிகள் நடைபெறும்.
இப் போட்டிகளுக்கு எவ்வளவு செலவாகும் என்று இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை. ஆசிய நாடுகளுக்கும்ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையே கலாசார மற்றும் விளையாட்டு உறவுகளை மேம்படுத்த இப் போட்டிகள்உதவும். போட்டிகள் நடைபெறும் தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
தில்லியில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் அதலெடிக்ஸ் போட்டிகளும், ஐஜிஐ மைதானத்தில் குத்துச்சண்டைப் போட்டிகளும், தல்கதோடாவில் நீச்சல் போட்டிகளும், கார்ணி சிங் மையத்தில் துப்பாக்கிச் சுடுதல்போட்டிகளும், ஆர்.கே. கன்னா டென்னிஸ் மைதானத்தில் டென்னிஸ் போட்டிகளும், டாக்டர் அம்பேத்கர்மைதானத்தில் கால்பந்துப் போட்டிகளும் நடத்தப்படும்.
1982-ம் ஆண்டு நடந்த 9-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளில்பல நாடுகள் கலந்து கொள்ளும் சர்வதேச விளையாட்டுப் போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications