தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
இலங்கை பாதுகாப்புப் படைத் தலைவர் சென்னைக்கு ரகசிய பயணம்

சென்னை:

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே உச்சக்கட்டப் போர் நடந்து கொண்டிருக்கும்வேளையில் இலங்கை ராணுவத் தளபதி ரோகன் டிசில்வா ரகசியப் பயணமாக சென்னை வந்துள்ளார்.

இவரது திடீர் பயணத்திற்கான காரணம் குறித்து அறிவிக்கப்படவில்லை. குடும்பத்துடன் வந்துள்ள அவர்சென்னையில் இந்திய ராணுவப்பயிற்சி அகாடமியில் புதன்கிழமை மதியம் வரைக் காத்திருந்தார்.

இலங்கைப் பாதுகாப்பு படையின் தலைமைத் தளபதியாக இருப்பவர் ரோகன் டிசில்வா தல்வாதே. இவர்புதன்கிழமை காலை 9.15 மணியளவில் ஏர்லங்கா விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமானநிலையத்தில் அவரை இந்திய ராணுவ அதிகாரிகள் வரவேற்றனர்.

ரோகன் டிசில்வாவுடன் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வந்துள்ளனர். இவர்கள் தவிர மேலும் 6 பேர்அவருடன் வந்திறங்கினர்.

இவர்கள் அனைவரும் நேராக சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி அகடமிக்கு சென்றனர். அங்கு பகல் 1 மணிவரை இருந்தனர்.

பகல் 2 மணிக்கு ஜெட் விமானத்தில் பெங்களூர் சென்றார்.

புட்டபர்த்தியில் தரிசனம் செய்வதற்காக அவர் பெங்களூர் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால்இலங்கையில் கடும் போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் தரிசனத்திற்காக அவர் இந்தியா வந்திருப்பாரா?என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+