தமிழகத்தில் இன்று
சென்னை:
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் உள்ள 11 ஆயிரம் காலியிடங்கள் வரும் 5 ஆண்டுகளுக்குள் நிரப்பப்படும் என்று முதல்வர்கருணாநிதி கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், ஆதிதிராவிடர், சீர்மரபினர் என்று அனைத்துப் பிற்படுத்தப்பட்டோருக்கும் வேலைவாய்ப்பில்இடஒதுக்கீடு செய்வதற்கான வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதற்காக நடந்த விவாதத்தில் முதல்வர் கூறும்போது,
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு 19 சதவீதமாக உள்ளது. இதில் 1 சதவீதம் பழங்குடியினருக்கு போய்ச் சேரும்.மேலும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கான சட்டநாதன் கமிஷனை அறிமுகப்படுத்தியது திமுக அரசுதான். அவர்களுக்கென்று தனிஅமைச்சகம், தனிஅமைச்சர் அமைத்ததும் திமுக அரசுதான்.
அவர்களுக்கான 11 ஆயிரத்து 264 காலியிடங்கள் தமிழக அரசுக் கல்லூரிகளில் உள்ளன. இந்தக் காலியிடங்கள் வரும் 5 ஆண்டுகளுக்குள் நிரப்பப்படும்.ஆனால் சிலர் ஒரே ஆண்டுக்குள் இந்தக் காலியிடங்களை நிரப்பும்படி ஆர்வமிகுதியில் கேட்கிறார்கள். ஆனால் அது மிகவும் கடினமான காரியமாகும்.வேண்டுமானால் 4 ஆண்டுக்குள் இந்தக் காலியிடங்களை நிரப்பிவிடலாம்.
தாழ்த்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்பளிக்கிறோம் என்ற பெயரில் வேலைவாய்ப்பில் முன்னேறியவர்களின் காலைவாரி விடக் கூடாது. காலியிடங்களைநிரப்பும்போது அரசு தாழ்த்தப்பட்டவர்கள் வேலையில் சேர்வதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்துவோம்.
ஆனால் அவர்களிலும் தகுதியுள்ளவர்கள் மட்டும்தான் வேலைவாய்ப்பில் அமர்த்தப்படுவார்கள். 1997 ம் ஆண்டு தமிழக அரசுக் கல்லூரிகளில் 100கல்லூரி ஆசிரியர்கள் நியமிப்பதற்கான காலியிடங்கள் இருந்தது. ஆனால் அதில் 72 கல்லூரி ஆசிரியர்கள் மட்டுமே நிரப்பப்பட்டார்கள். அதாவது தகுதியுள்ளஆசிரியர்கள் கிடைக்கவில்லை.
இதேபோல் எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த 450 ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் தேவைப்பட்டார்கள். அதுவும் போதிய தகுதியில்லாத காரணத்தால் அந்தகாலியிடங்களும் நிரப்பப்படவில்லை.
தற்போது இதுகுறித்து அரசு தீவிரமாய் ஆலோசித்து வருகிறது. இவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 11 ஆயிரத்து 264 காலியிடங்கள் விரைவில்நிரப்பப்படும். 5 ஆண்டுகளுக்குள் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கான ஆரம்ப முயற்சிகள் இந்த ஆண்டு முதலே துவக்கப்படும்என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications