தமிழகத்தில் இன்று
வாஷிங்டன்:
இந்தியா மீதான பொருளாதாரத் தடைகள் அனைத்தையும் விலக்குவது தொடர்பான சட்ட மசோதா (பில்)அமெரிக்க நாடாளுமன்றத்தில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அமெரிக்க எம்.பி சாம் பிரவுன்பேக்தெரிவித்தார்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சாம் பிரவுன்பேக், தெற்காசியப் பகுதிகளுக்கான அமெரிக்க நாடாளுமன்றத்தின்வெளிவிவகாரத் துறை துணை கமிட்டியின் தலைவராக உள்ளார். இந்தியாவுக்கு எதிரான அனைத்துபொருளாதாரத் தடைகளையும் விலக்குவது தொடர்பாக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரமுடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
1998-ம் ஆண்டு அணு ஆயுதச் சோதனை நடத்தியதன் மூலம் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள்விதிக்கப்பட்டன. அவ்வப்போது சில தடைகள் நீக்கப்பட்டன. ஆனால், இந்தியா மீது இன்னும் பல தடைகள்அமலில் உள்ளன. இந்தியா மீதான தடைகளை விலக்க அதிபர் பில் கிளின்டனுக்குத் தான் முழு அதிகாரம் உள்ளது.
பொருளாதாரத் தடைகளால் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட முடியவில்லை. ஆகவே,தடைகளை முழுவதுமாக நீக்குவது தொடர்பாக வெளிவிவகாரத் துறை மசோதாவில் புதிய திருத்தங்களைச்செய்துள்ளேன். இவை விரைவில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். இந்த மசோதா மீது அடுத்தவாரம்வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
தடைகள் நீக்கப்பட்டால்தான் இந்தியாவும் அமெரிக்காவும் பொருளாதாரத் துறையில் இணைந்துசெயல்படமுடியும். ஆகவே, என்னால் என அதிகாரத்துக்கு உட்பட்டு இந்தியா தொடர்பாக வெளிவிவகாரத் துறைமசோதாவில் திருத்தம் செய்துள்ளேன். இத் திருத்தங்களுடன் மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டால் இந்தியா மீதானதடைகள் விலக்கிக் கொள்ளப்படும்.
சமீபத்தில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கிளின்டன், இந்தியா மீதான பொருாதாரத் தடைகளைவிலக்கிக் கொள்வது தொடர்பாக அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், கிளின்டன்அவ்வாறு செய்யாதது எனக்கு பெரிய ஏமாற்றமாகிவிட்டது.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (சிடிபிடி) இந்தியா கையெழுத்திடாதவரை அதன் மீதான தடைகள்விலக்கிக் கொள்ளப்படாது என்று அமெரிக்க அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆகவே, தடைகளை விலக்கிக்கொள்ள சிடிபிடி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேண்டும் என்று இந்தியாவை அமெரிக்கா நிர்பந்திக்கலாம் என்றார்பிரவுன்பேக்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications