தமிழகத்தில் இன்று
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ரங்க்ரீத் என்ற இடத்தில் ரூ.9 கோடியில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பப் பூங்காஅமைக்கப்பட உள்ளது என்று மாநில தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முசாஃபா கமால் தெரிவித்தார்.
ரங்க்ரீத்தில் உள்ள தொழிற்பேட்டையைச் சுற்றிப் பார்த்த அவர், கம்ப்யூட்டர் தொழில்நுட்பப் பூங்கா பற்றிகூறியதாவது:
ரங்க்ரீத்தில் ரூ.9 கோடியில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படவுள்ளது. அதற்கான அனைத்துநடவடிக்கைகளும் முடிந்து விட்டன. பாதுகாப்புத் துறை, பிரசார் பாரதி நிறுவனம், தகவல் தொடர்புத் துறைஆகியவற்றிடமிருந்து ஒப்புதல் வாங்கப்பட்டுவிட்டது. விரைவில் பூங்கா அமைக்கும்பணி துவங்கப்படும்.
இப் பூங்கா அமைக்க ஏற்கெனவே ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டு விட்டது. 60 ஏக்கர் நிலப்பரப்பில்அமைக்கப்படவுள்ள இப் பூங்காவில் 104 நிறுவனங்கள் செயல்படும். அவற்றால் சுமார் 2000 பேருக்குவேலைவாய்ப்பு கிடைக்கும். இது தொடர்பாக காஷ்மீர் அரசுக்கும், இந்திய கம்ப்யூட்டர் தொழில்நுட்பப் பூங்காஅமைப்புக்கும் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றார் கமால்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications