தமிழகத்தில் இன்று
சென்னை:
முதல்வர் கருணாநிதி கோட்டைக்குக் காரில் செல்வதை வீடியோவில் படம் எடுத்த மூவர் கைது செய்யப்பட்டனர்.இதனால் ஏற்பட்ட திடீர் பரபரப்புக்குக் குழப்பம் தான் காரணம் என்பது பின்னர் தெரிய வந்தது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் இருந்து முதல்வர் கருணாநிதி காரில் கோட்டை புறப்பட்டார்.அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் அவர் வருமபோது காலை 9.10 மணி.
அப்போது சாலையில் மூவர் வீடியோ காமிரா சகிதமாக நின்று முதல்வரை படம் எடுத்தனர். இதைப் பார்த்ததும்பதட்டமடைந்த போலீசார் உடனடியாக அந்த மூவரையும் பிடித்தனர். அவர்களிடம் படம் எடுக்க அனுமதிபெற்றீர்களா? என்று விசாரித்தனர்.
அப்போது அவர்கள் கூறிய விவரம்:
திருச்சியைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவர் கலைக்காவிரி பைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அந்தஅமைப்பின் சார்பில் முதல்வரின் 77 வது பிறந்தநாளை ஒட்டி ஒரு டாக்குமென்ட்ரி படம் வெளியிட முடிவுசெய்யப்பட்டுள்ளது.
முதல்வரின் அன்றாடப் பணிகள் எப்போது துவங்கி எப்போது முடிகிறது எத்தனை மணிநேரம் அவர் பணிபுரிகிறார்என்பதைப் படம் எடுப்பதற்காக முதல்வரிடம் அனுமதியும் பெற்றனர். அதில் ஒரு பகுதியாக முதல்வர்கோட்டைக்கு செல்வதை படம் எடுப்பதற்காக அவர்களுக்கு அண்ணா சமாதி அருகில் அனுமதி தரப்பட்டிருந்தது.
ஆனால் அவர்கள் அந்த அனுமதி பற்றி போலீசாரிடம் தெரிவிக்காமல் அண்ணாசிலை அருகில் நின்று படம்எடுத்ததால் ஏற்பட்ட குழப்பம் என்பது தெரிந்தது. இந்த குழப்பம் முதல்வர் கொடுத்த விளக்கத்திற்கு பின்னர் தான்விடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications