தமிழகத்தில் இன்று
சென்னை:
தமிழகத்தையே உலுக்கிய கோவை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு அல்உம்மா இயக்கத்தினரே காரணம்.மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியை கொல்ல மனித வெடிகுண்டுகள் அனுப்பப்பட்டது உண்மை என்றுஇச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி கோகுலகிருஷ்ணன் கமிஷன் தெரிவித்துள்ளது.
கோவை நகரிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 14.2.1998 அன்று தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள்நடைபெற்றன. 98ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கோவைக்கு பிரச்சாரம் செய்ய மத்திய உள் துறைஅமைச்சர் அத்வானி வருகை தந்த போது இந்த பயங்கரம் நடைபெற்றது.
இச்சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
இக்குண்டு வெடிபபு தொடர்பாக அல்உம்மா அமைப்பின் தலைவர் பாஷா உள்பட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளளர். இந்நிலையில் இக்குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த தமிழக அரசுஉத்தரவிட்டது.
அதன்படி கோகுலகிருஷ்ணன் கமிஷன் அமைக்கப்பட்டது. இக் கமிஷன் இச்சம்பவம் குறித்து விசாரணைமேற்கொண்டது. இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற கமிஷன் விசாரணைக்குப் பின்னர் அதன் அறிக்கையைஅரசுக்கு அளித்தது. அரசு அந்த அறிக்கையை வியாழக்கிழமை சட்டசபையில் தாக்கல் செய்தது.
விசாரணை அறிக்கையயில் நீதிபதி கோகுலகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:
முஸலீம் அடிப்படைவாதக் குழுக்கள், குறிப்பாக அல் உம்மா இயக்கத்தை சேர்ந்தவர்கள், முஸ்லீம் மக்களுக்குசொந்தமான சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்கும், காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டால் முஸ்லீம்கள்இறந்ததற்கு பழி வாங்குவதற்காகவும் வெடி குண்டுகளை வைத்தனர்.
மத்திய உள் துறை அமைச்சர் எல்.கே. அத்வானியை கொல்லும் நோக்குடன் மனித வெடி குண்டுகளை கோவைநகரத்தில் தயார் நிலையில் வைத்திருந்தனர்.
இந்துக்கள் மற்றும் காவல் துறையினரின் மேல் உள்ள பகைமை உணர்வின் காரணமாக அத்வானியை கொல்லதிட்டமிட்டிருந்தனர். காவல் துறையினர் மிகவும் தீவிரமாகவும், விழிப்புடனும் தங்கள் பணியை செய்யத்தவறியதால்தான் முஸ்லீம் அடிப்படைவாதிகள் குறிப்பாக அல்உம்மா இயக்கத்தினரால் பல இடங்களில்குண்டுகளை வெடிக்கச் செய்ய முடிந்தது.
இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழ்பபீட்டுத் தொகையாக தமிழக அரசு இதுவரை ஒரு கோடியே 2லட்சத்து 373 ரூபாய் வழங்கியுள்ளது. இது தவிர மேலும் 2 கோடியே 13 லட்சத்து 30 ஆயிரத்து 718 ரூபாய்நிவாரணம் வழங்க வேண்டும் என்று நீதிபதி கோகுல கிருஷ்ணன் பரிந்துரை செய்சுள்ளார்.
விசாரணை கமிஷனரின் முடிவுகளை தமிழக அரசு கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டு செயல்படுத்தவிருப்பதாகஉறுதி அளிததுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications