தமிழகத்தில் இன்று
வாஷிங்டன்:
தமிழ் ஈழத்தை அங்கீகரிக்க மாட்டோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கைவிவகாரத்தில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. இந்தப் பிரச்சினை தொடர்பாகஇந்தியாவின் உணர்வுகளை புரிந்து கொண்டுள்ளோம் என்றும் அமெரிக்காகூறியுள்ளது.
தெற்காசிய விவகாரங்களுக்கான வெளியுறவு இணையமைச்சர் கார்ல் இன்டர்பர்த்இதுகுறித்து ஹிந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இலங்கை விவகாரத்தைப் பொருத்தவரை,அப்பிரச்சினையில் தலையிட முழுமையானவகையில் பொருத்தமான நாடு இந்தியா மட்டுமே.இலங்கைக்கு உதவ விரும்பும் எந்தநாடும், இந்தியாவின் உணர்வைப் புரிந்து கொண்டுதான் எதையும் செய்ய வேண்டும்என்று அமெரிக்கா நினைக்கிறது.
இலங்கையைப் பொருத்தவரை, அவர்களுக்கு அருகாமையில் உள்ள மிகப் பெரியசக்தி இந்தியா மட்டுமே. இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் பிராந்தியஉணர்வுகளை அமெரிக்கா புரிந்து கொண்டுள்ளது. அதை மதிக்கிறது.
இலங்கையில் அரசுப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள்அமைப்பினருக்கும் இடையில் நடந்து வரும் சண்டை குறித்து இந்திய அரசுடன்அமெரிக்கா தொடர்ந்து தொடர்பு வைத்துள்ளது.
தமிழ் ஈழத்தை அமெரிக்கா அங்கீகரிக்காது:
இலங்கையைப் பிரித்து தனி நாடு அமைப்பது என்ற கோரிக்கையை அமெரிக்காஅங்கீகரிக்காது. அமெரிக்கா மட்டுமல்லாது, உலக நாடுகள் எதுவும் இதை ஏற்றுக்கொள்ளாது.
இலங்கைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும். அரசியல்தீர்வு மட்டுமே இப்பிரச்சினையைத் தீர்க்க உதவும். அரசியல் சட்டத் திருத்தம்,அதிகாரப் பகிர்வு ஆகியவை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமாதானப் பேச்சு நடத்தநார்வே நாடு முயற்சி மேற்கொண்டுள்ளது பாராட்டத்தக்கது. இதை அமெரிக்காவரவேற்கிறது.
இலங்கையில் தற்போது எழுந்துள்ள பிரச்சினையைத் தீர்க்க இந்தியா மட்டுமே தகுதிவாய்ந்தது என்று நார்வே சிறப்புத் தூதர் எரிக் சோல்ஹேம் கூறியுள்ளதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.
தனக்குள்ள பொறுப்புணர்வை உணர்ந்து மிகவும் எச்சரிக்கையாகவும், நிதானமாகவும்இப்பிரச்சினையை இந்தியா அணுகுகிறது. இதை அமெரிக்கா பாராட்டுகிறது. ராணுவரீதியாக இப்பிரச்சினையில் தலையிட இந்தியா விரும்பவில்லை என்பதையும்அமெரிக்கா புரிந்து கொண்டுள்ளது.
பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அதிபர் சந்திரிகா அறிவித்துள்ள சிறப்புச்சலுகைகள், நீண்ட காலமாக உள்ள இப்பிரச்சினைக்குத் தீர்வு காண உதவும் என்றுமுன்பிருந்தே அமெரிக்கா கூறி வருகிறது. அதிபர் சந்திரிகாவுடன் இணைந்துபிரச்சினைக்குத் தீர்வு காண முயலுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரனில்விக்கிரமசிங்கேவுக்கும் அமெரிக்கா கோரிக்கை விடுத்து வருகிறது.
சமீபத்திய பொதுத் தேர்தலுக்குப் பிறகு அரசுடன் இணைந்து பிரச்சினைக்குத் தீர்வுகாண முயற்சிப்பதாக விக்கிரமசிங்கேயின் கட்சி கூறியுள்ளது அமெரிக்காவுக்குநம்பிக்கை அளிப்பதாக உள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications